7.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!

7.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!


மலேசியாவின் ஆட்சிமுறை பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சி முறையை ஒத்தது. இரட்டை சட்டசபைகள் கொண்டது. மேல்சபையின் பிரதிநிதிகளை மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வர்.

கீழ்சபைக்கு ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் இருவர் வீதம் தெரிவு செய்யப்படுவர்.

மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில் 9 மாநிலங்களில் சுல்தான்கள் உள்ளனர்.  4 மாநிலங்களுக்கு  நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கவர்னர்கள் தெரிவு செய்யப்படுவர்.

கீழ்சபையின் மூலம் மக்களால்  தெரிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவரே பிரதமராவார்.  

மலேசியாவின் அரச நிர்வாகப் பொறுப்பு பிரதமரையே சாரும்.

தற்போதைய பிரதமர் மஹாத்தீர் மொஹமத் ஆவார். 

ஜுலை 10 1925ல் அலோரிஸ்டாரில் பிறந்த டான் டொக்டர் மஹாதீர் முஹம்மது 1981ல் ஆட்சிக்கு வந்து பின்னர் 2003ல் ஓய்வு பெற்றார். மலேசியாவின் சில பல அரசியல் அதிர்வுகளுக்குப் பின்னர் மறுபடியும் 2018ல் ஆட்சிபீடமேறி தற்போதும்  அவரே பிரதமராகவுள்ளார். மலேசியாவின் வளர்ச்சியில் அவரது பங்கு அளப்பறியது என்று குறிப்பிட வேண்டும்.

பிரதமரின் காரியாலயத் தொகுதி ஆரம்பத்தில் நகரமத்தியிலிருந்த போதிலும் -அது 1999ல் புட்ரஜயா (Putrajayah)  என்ற இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புட்ரஜயா  மலேசியாவின் நிர்வாகத் தலைநகராகும். அது விமான நிலையத்தைத் தாண்டி காணப்படுகின்றது. இங்கே  அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள"செரி சௌஜானா" பாலமொன்றும்  -  பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலையம்சம் பொருந்திய மஸ்ஜித்  ஒன்றும் காணப்படுகின்றது. 

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர்.  பாராளுமன்றம் இங்கேயே அமைந்துள்ளது. கோலாலம்பூர்   244 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டது. கோலாலம்பூர்  என்பதன் கருத்து சேற்றுநீர்  ஆறுகள் சேருமிடம் -Muddy Comflence  என்பதாகும். 

கிளான்  ( Klan ) கொம்பக் (Kompak ) என்பன கோலாலம்பூர் நகர மத்தியில் பாயும் நதிகளாகும்.  1857ல் தகர அகழ்வுச் சுரங்கத்தில் கோலா என்ற பகுதியிலிருந்து பணிபுரிய வந்த சீனர் இவ்விரு நதிகளும் சேருமிடத்தில் தகர அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.  லும்பூர்  என்பது சேற்று நீர் ஆகும். 
 
அதுவே பின்னர் கோலாலம்பூர்  ஆகியதாகக் கூறப்படுகின்றது. எனக்கு வழிகாட்டி  பத்மநாதன்  குறிப்பிட்டே இந்த விபரங்களை அறிந்து கொண்டேன். 

தகரம் மற்றும் பெற்றோலியக் கனிப்பொருட்கள் மலேசிய நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகளவு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. 1980வரை உலகின் மிகப்பெரிய தகர உற்பத்தி நாடாக மலேசியா திகழ்ந்து வந்துள்ளது. 

சபா - சரவாக் போன்ற கடற்கரைப் பிரதேசங்களில்  பெற்றோலியக் கனிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஜமக் மஸ்ஜித் மலேசியாவின் பழைமைவாய்ந்த பள்ளிவாயிலாகும். இது 1909ல்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிளான் - கொம்பக் நதிகள் இணைகின்ற இடத்தில்  இம்மஸ்ஜிதைப் பார்க்க முடிந்தது. 

இது வட இந்திய முகலாய மஸ்ஜித்களின் தோற்றம் கொண்டது. கிளான் - கொம்பக் நதிகள் சந்திக்கின்ற இடத்தை மிக அருகில் நின்று என்னால் பார்க்க முடிந்தபோதிலும் - ஜமக் மஸ்ஜிதை நதிகள் இணைகின்ற இடத்திலிருந்தே பார்த்தேன். 

இம்மஸ்ஜிதுக்கு மிகக் கிட்டிய தூரத்தில் ஒரு காலத்தில் அமைந்திருந்த  சைனா டவுன்  தற்போது வேறோர்  இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பயண வழிகாட்டி பத்மநாதன் மூலம் அறிந்து கொண்டேன்.

அடுத்த நாள் விடிந்ததும் பஹாங் பிரதேசததில் அமைந்துள்ள ஜென்டிங் ஹைலண்டை   நோக்கிப் புறப்பட்டேன். கோலாலம்பூரிலிருந்து ஒரு மணித்தியாலம் வாகனத்தில் பயணம் செய்தால் ஜெண்டிங் ஹைலண்டை அடையலாம். 

இது மலைப்பாங்கான பகுதியாகும்.  நமது நுவரெலியாவை ஒத்தது எனலாம். அதுபோன்று உல்லாசப் பயணிகளைக் கவரும் இன்னும் பல மலைப்பாங்கான பிரதேசங்களும் உள்ளன. 

கேபல் காரில் ஒரு மலையுச்சியிலிருந்து  இன்னொரு மலையுச்சி வரைக்கும் இரம்மியமான காட்டுப் பகுதியை ரசித்தபடி சென்று கொண்டிருந்தபோது உலகிலேயே மிகப்பெரிய பூவாகக் கருதப்படும் ரெப்லிகா மலர்கள் இரண்டினைக் காணமுடிந்தது.


 
பிரசித்தி பெற்ற பல ஹோட்டல்கள் மலையுச்சியில் காணப்படுகின்றன. பெஸ்ட்வர்ட்  ஹோட்டல் 28 மாடிகள் கொண்டது. இதில் ஓர் அறையிலேயே நான் தங்கினேன். 

இந்த ஹோட்டல் 6118 அறைகள் கொண்டது. இந்த ஹோட்டலில் பிரசித்திபெற்ற 11 உணவு விடுதிகள் (Restaurant) உள்ளன. 2008ல் லாஸ்வெகாஸில் அதிக அறைகள் கெண்ட த பிளாஸ்ஸோ (The Plazzo) உருவாகும் வரை உலகிலேயே அதிக அறைகள் கொண்ட ஹோட்டலாக 2006ல் கின்னஸ் சாதனை படைத்த ஹோட்டல் இதுவாகும்.
 
ஹோட்டலுக்கு கீழ்ப்பாக்கமாக சுமார் 46000 சதுர மீற்றர்கள் கொண்ட பெஸ்ட் வர்ல்ட் பிளாஸா  அமைந்துள்ளது. இங்கே பிரமாண்டமான வர்த்தகத் தொகுதி -கசினோ - உள்ளக தீம்பார்க் என்பன  காணப்படுகின்றன.
 
இங்கே அமைந்துள்ள வுiஅந ளுஙரசைந இல் வாராந்தம் கலைநிகழ்ச்சிகளும்- மெஜிக் விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன. விடுதலை சிலை - ஒஸ்கார் சிலை போன்றவற்றின் பிரதிகளும் (  Plazz) இப்பகுதியில்  காணப்படுகின்றன.

இங்கே சிறுவர்கள் நீந்தி விளையாடுவதற்கான அழகிய தடாகங்களும் - சினிமாத் தியேட்டர்களும் -  ஓடங்கள் ஓட்டி மகிழக்கூடிய  பாரிய தடாகங்கள் பலவும் காணப்படுகின்றன. 
 
இவற்றைக் கண்டு கழித்துவிட்டு - இரவு 28ம் மாடியில் துயின்றுவிட்டு -ஹோட்டலிலிருந்து புறப்பட்ட நான் பட்டுகேவ் வரும் வரைக்கும் அழகான வலைந்து நெலிந்து செல்லும் சாலையில் கண்கவர் இயற்கைக் காட்சிகளைக் கண்டு கொண்டு வந்தேன். ஜென்டிங் ஹைலண்டிலிருந்து  சுமார் 45 நிமிடங்கள் வரை பயணம் செய்து பட்டுகேவ் அமைந்துள்ள இடத்தை அடைந்தேன்.

புவியியலாளர்கள் இதனை உலகிலுள்ள சுண்ணாம்புக் குகைகளில் ஒன்றாகவே கருதுகின்றனர். குகை அடிவாரத் திடலில் வந்திறங்கியதும் - நடுத்தர வயதான ஒரு பெண்மணி பக்திப் பரவசத்துடன் பிரசாசத்தை நீட்டியதும் நான் வியந்து போனேன்.

அதனை நன்றிப் புன்னகை ஒன்றுடன்  வாங்கிக் கொண்டு படிகளில் ஏறத்தொடங்கினேன். 272 படிகள் ஏறி முடிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது.   

பட்டுகேவ் கோலாலம்பூரிலிருந்து 13 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே  இந்துக்கள் அதிகம் வாழ்கின்ற இஸ்லாமிய நாடு மலேசியாவாகும். இந்துக்கள் இவ்விடத்தைப் புனிதத் தலமாக மதித்து நேர்த்திக் கடன்களோடு இங்கு வருவதை நேரில் காணக்கூடியதாக இருந்தது.

1892ம் ஆண்டளவில் வனாந்திரக் காட்டுப் பகுதிக்குள்ளிருந்து இக்குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குகைத் தொகுதியைக் கண்டுபிடித்து அதன் நிருமாணப் பணிகளை முன்னெடுத்தவராகக் கருதப்படுவர்தம்புசாமிப்பிள்ளை என்பவராவார்
.   
இவரது சிலையொன்று குகையின் அடிவாரத்தில் காணப்படுகின்றது. கோபாலப்பிள்ளை என்பவர்  தம்புச்சாமிப்பிள்ளைக்குத் தோல்கொடுத்து இக்குகை அமைந்துள்ள பகுதியைச் சீர்செய்துஇ யாத்ரிகர் வந்து போவதற்காக வழியமைத்தவர் என்று வழிகாட்டி பத்தமநாதன் கூறி அறிந்து கொண்டேன்.

உலகிலேயே மிக உயரமான தங்கக் கலரில் ஜொலிக்கும் முருகன் சிலையொன்று இக்குகையின் அடிவாரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. அண்மைக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இது  - 29. 01. 2006ல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் உயரம் 141 அடிகளாகும். இச்சிலை நிர்மாணிப்புக்கென சுமார் 670 ஆயிரம் அமரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. 

சிரி பாலசுப்ரமணிய ஆலயத்தின் அடிவாரத்திலிருந்தே இந்த முருகன் சிலைநிர்மாணிக்கப்பட்டுள்ளது. தவிர - இப்பிரதேசத்தில் குகையின் அடிவாரத்திலும குகைக்குள்ளும் பல வழிபாட்டுத் தலங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தைப்பூசம் திருவிழா வருடாந்தம் வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்பட்டுவருகின்றது. பிரதி வருடமும் தை மாதத்தில் நடைபெற்றுவரும் இத்திருவிழாவுக்கு
 
கிட்டத்தட்ட எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவதாகக் கூறப்படுகின்றது. இத்திருவிழாவின்போது கோலம்பூரில் அமைந்துள்ள  மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்படும் தேர்ப்பவனி பட்டுக்கேவ் வரை வீதிவலம் வருவதாகவும்  ஆடல் பாடல்  கொட்டு  முழக்கங்களுடன் பக்தர்கள் வீதி வலம் வருவதுடன் - காவடியாட்டம் - பால் குடம் தாங்கிய பெண்கள் நடனம் போன்றனவும் இவ்வீதி ஊர்வலத்தின்போது நிகழ்வதாகவும் வழிகாட்டி பத்மநாதன் கூறி அறிந்து கொண்டேன்.
  
வருடம் முழுவதும் தினமும் பக்தர்களும்  உல்லாசப்பயணிகளும் அதிகளவில்  வந்து போகும்  இடமாகவும் பட்டுகேவ் காணப்படுகின்றது. பரந்து விரிந்து காணப்படும் அடிவாரத்திடலில் புறாக்கள் அதிகமாகக் காணப்படுவதோடு  படிகளின் தொடக்கம் முதல் குகையைச் சுற்றியும் குகைக்குள்ளும் எல்லாப் பகுதிகளிமே ஆங்காங்கே அலைந்து திரிகின்ற குரங்குகளையும் காணக்கூடியதாக இருந்தது.
    
பட்டுக் குகையையும் முருகன் சிலையையும் பார்த்த பின்னர் சொக்லட் தொழிற்சாலை - பியுட்டர் தொழிற்சாலை - தேசிய மஸ்ஜித் - அரண்மனை - யுத்தத்தின் போது இறந்தோர் நினைவுப்பூங்கா- வண்ணத்துப்பூச்சிகள் சரணாலயம் போன்றவற்றைப் பார்வையிட்ட பின்னர் திரும்பவும் கோலம்பூர் ஹோட்டலுக்கு வந்தேன். 


  
கேஎல் பறவைகள் பூங்காவில்  சுமார் 5000 பறவைகளும் - வண்ணாத்திப் பூச்சிப் பூங்காவில் சுமார் 120 இனங்களைக் கொண்ட 6000 அலங்கார வண்ணாத்திப் பூச்சிகளையும் பார்க்கலாம். மலேசியாவின் தேசியப் பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் இப்பூங்கா காணப்படுகின்றது.
 
 
இரவோடிரவாக தாயகம் நோக்கிவரும் நோக்கில் விமானநிலையம் அடையும் வழியில் புத்ரஜயாவைத் தூரத்தேயிருந்து பார்க்க முடிந்தது.     

(முற்றும்)

பிற்சேர்க்கை:

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதி

1991ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, சிங்கப்பூரில் பொதுமக்களே நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த சட்டவாக்கத்துக்குப் பின்னர் 2023ல் நடந்த மூன்றாவது தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.   

சிங்கப்பூர் பல்லினங்கள் வாழும் நாடாக இருந்த போதிலும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும்  நாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள பற்றுமே அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முதற்காரணமாகும். 

ஆசிய நாடான சிங்கப்பூரின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  ஹலீமா யாகூப் அவர்களின்  ஆறு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும், புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 66 வயதான, திரு தர்மன் சண்முகரத்னம் முறையே 76,75 வயதுகள் கொண்ட சீன வம்சாவளிகளான இங் கொக் செங், டான் கின் லியான் ஆகியோரை வீழ்த்தி, முன்னணிக்கு வந்து ஜனாதிபதியானார்.)

மலேசியப் புதிய பிரதமர்

மலேசிய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவரான இவரை மலேசியப் பேரரசர்  நியமனம் செய்கிறார்.

பிரதமரின் கீழ், பிரதமர் துறை எனும் ஓர் அமைச்சு செயல்படுகின்றது.

மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றவரே பிரதமராகும் தகுதியைப் பெறுகின்றார்.

அந்த வகையில் தற்போதைய பிரதமராக அன்வர் இப்ராகீம்
24 நவம்பர் 2022 முதல் பதவி வசித்துவருகின்றார்.

மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் பிரதமராக  துங்கு அப்துர் ரஹ்மான் என்பவரே இருந்து வந்தார்.

இருப்பினும் 2018ம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டதால்  நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில்,  19 நவம்பர் 2022ல், ஒரு பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு, பின்னர் 24 நவம்பர் 2022ல் அன்வார் இப்ராகிம் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

துங் அப்துர் ரஹ்மானுக்குப் பிறகு முறையே. துங் அப்துர் ரஸாக்,   துங் ஹுசைன், துங் மஹாதீர் முஹம்மத், துங் அப்துல்லாஹ் அஹ்மத், நஜீப் துங் ரஸாக், மீண்டும் துங் மகாதீர் பின் முகமது, அதன் பின்னர்  அன்வர் இப்ராகீம் தற்போது பதவி வகித்து வருகின்றார்.

ஐ. ஏ. ஸத்தார்
nisshin88@gmail.com    
 semmaiththuliyan


 



Post a Comment

Previous Post Next Post