நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் மிகவும் கவலைப்படுகிறோம். உடற்பயிற்சியுடன் கூடிய சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
உடல் எடை கூடுவது பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும். இதற்கு ஆரோக்கியமற்ற உணவு வகைகள் முக்கிய காரணமாகும். ஃபாஸ்ட் ஃபுட் அதிகம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் வருகிறது. சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் இதனை சரி செய்யலாம்.
நெல்லிக்காய் நெல்லிக்காய் சாறு வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து பிட்டாக இருக்க உதவுகிறது. இது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
வெந்தயம் உடல் எடையை குறைக்க வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெந்தயத்தை இரவு முழுவதும் நன்கு ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடிக்கவும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இது நல்லது.
எலுமிச்சை சாறு எலுமிச்சம் பழச்சாறு செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடை எளிதாக குறையும். மேலும் தொப்பை கொழுப்பை சரி செய்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
ஓம தண்ணீர் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் ஓம தண்ணீரை குடித்து வந்தால் தொப்பையை குறைக்கலாம். இரவு உணவுக்கு பிறகு ஒரு டம்ளர் குடித்துவிட்டு, காலையில் மீதமுள்ள தண்ணீரை குடிக்கலாம்..
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments