தொழிலதிபர் ஒருவருக்கு ஒற்றர் வேலையும் கைக்கூலி வேலையும் பார்த்து வந்த கல்ஹின்னையைச் சேர்ந்த ஒரு நபர் Wakf Traibunal courts இல் வைத்து மருதானை பொலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்
இவர் 2024.12.21 அன்று Wakf Tribunal நீதிமன்றத்தில் கல்ஹின்னை பெரிய பள்ளிவாயல் நிர்வாக தேர்வு தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நீதிமன்ற சட்டதிட்டத்தினை மீறி தொழிலதிபருக்கு நீதிமன்ற விடயங்களை கையடக்க தொலைபேசி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ததுடன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னரும் கொள்ளுப்பிட்டி பள்ளிவாயல் வழக்கு நடைபெறும் சந்தர்ப்பத்திலும் தொடராக இச்செயலை செய்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
எனவே மருதானை போலீசாரினால் கைது செய்யப்பட்ட இவர் Majestic court இல் ஆஜர் படுத்தப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணை நடாத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்*
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments