விரதமும் நோன்பும்
"நீளும் விரத நிகழ்வு"
(நேரிசை வெண்பா)
பாடும் கிடைக்கா துபடுகின்ற துன்பத்தில்
ஏடும் எழுதிடா இன்னலிலே--
வாடுகின்றார்
நாளும் பசியில் நலிகின்றார் "ஏழையர்"
நீளும்"விரத"நிகழ்வு:
"இம்மை மறுமை இனிது"
(நேரிசை வெண்பா)
ஒருநூலை கற்றல் ஒருபட்டக்"கல்வி"
பெருமையைப் பெற்றிடும் பேறு--
திருவெனும்
நம்தமிழ் ஓத நடக்கும் நலமெலாம்
இம்மை மறுமை இனிது:
==
"தொண்டினிலே களித்தல் வேண்டும்"
(எண்சீர் மண்டிலம்)
எண்ணுகின்ற எண்ணத்தால் நலமே ஓங்க
எப்போதும் வறியவரின் நலத்தைத் தாங்க
மண்நிலத்தில் பிறப்பெடுத்த பயன்கள் என்றால்
மனமெல்லாம் கருணையிலே திகழ்தல் வேண்டும்
தண்மையிலே பார்த்திருக்கும் பார்வை வேண்டும்
பண்பாட்டைத் தந்திருக்கும் பாடம் வேண்டும்
கண்மலர்ந்து மூடுகின்ற நேரங் கூட
களமாடும் "தொண்டினிலே" களித்தல் வேண்டும்:
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments