Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-72


365. வினா :யாருடைய சொல் கேட்டு உலகம் நடக்கும் ?
விடை : முறையுடன், இன்சொல் பேசுபவரின் சொல் கேட்டு
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.(648)

366. வினா:மணக்காத பூவைப் போன்றவர் யார்?
விடை : தாம் கற்றதை எடுத்துரைக்காதோர்
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.(650)

367. வினா: துணை நலம் எதனைத் தரும்?
விடை:ஆக்கம் தரும்
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.(651)

368.வினா;வினை நலம் எதனைத் தரும்?
விடை:வேண்டிய எல்லாம் தரும்
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.(651)

369.வினா:எத்தகைய செல்வத்தைவிட வறுமை சிறப்பாகும்?
விடை:பழியுடன் கூடிய செல்வத்தைவிட
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.(657)

(தொடரும்)



Post a Comment

0 Comments