Ticker

6/recent/ticker-posts

Ad Code



ராஜகுமாரியின் சுயம்வரம்-63


ஆனால் சற்று நேரத்தில்  அத்தனையும் மறந்து மயங்கி விட்டார் இளவரசி.
உடனே பல்லக்கில் ஏற்றி தன்னோட அறைக்குக் கொண்டு வந்தார்கள்.

மந்திரிக்கும் மகாராணிக்கும் செய்தி காதில் எட்டியது அவர்களும் அங்கே விரைந்தார்கள்.  ஒரே பரபரப்புக் காணப் பட்டது .சிறுது நேரம் பின் நிதானித்து அன்று நடந்த அனைத்தையும் கேட்டு அறிந்து விட்டு தன் மகள் சற்று குணமடைந்து வருவதாகவே மனதில் உறுதிபூண்ட மகாராணி விடை பெற்றார்.

மந்திரியும் மருத்துவரின் தோள் மேல் தட்டி விட்டு விரைந்தார் .

நேரம் 12 மதியம்  படை வீரன் விரைந்து "மந்திரியாரே நம் கோட்டை வாசல் முன்பே ராஜாவோட பட்டத்து யானையின் படை தெரிகிறது" என்றான்.

"சரி நீங்கள் போய் கோட்டை வாசலைத் திறந்து மரியாதையோடு அழைத்து வாருங்கள்" என்றார் .

மகாராணிக்கு அழைப்பிட்டார் .

அவர் வந்ததுமே "சற்று பொறுமையோடு இருங்கள் ராணி நான் பேசிக் கொள்வேன்" என்று கூறி அமர்த்தினார் மந்திரியார்.

"ஆகட்டும் மந்திரியாரே" என்ற மகாராணி அமைதியோடு அமர்ந்தார். சம்மந்தி மகராஜனைக் கண்டதும் எழுந்து வரவேற்று அமரும் படி கூறி தானும் அமர்ந்தார் மந்திரிக்கும் வணக்கம் கூறி அமர்ந்தார் ராஜகுமாரன். 

பேசிக் கொண்டு இருக்கையிலே பலரசம் வந்ததும் அருந்துமாறு ராணி கூறவே அதனை வாங்கிக் கையில் எடுத்தவர் தன்னோட "மருமகள் எங்கே" என வினா தொடுத்தார்.

உடனே மந்திரி  கூறினார் "தற்போதுதானே வந்தீர்கள் ராஜாவே உணவு அருந்தி விட்டு தாமதமாய்ப் போவோம் ராஜகுமாரிக்கு வைத்தியம் நடக்கின்றது நான் அழைத்துச் செல்கின்றேன்" என்றார். 

(தொடரும்)



Post a Comment

0 Comments