அழகும் ஒளியும்
தன்னகம் கொண்டாலும்
விண்மீனின் பெருமை
வானில் இருந்தாலே
செம்மையும் மனமும்
கொண்டது என் சிகப்பு ரோஜா
அதன்பெருமை
மங்கையின் கூந்தலிலே
வண்டுகள் புவியில்
சுற்றி வலம்வந்தாலும்
தேன்சுந்தும் மலரிலேதான்
மகிழ்ச்சி
நிலவு மங்கை நீங்கா
ஒளிசிந்தினாலும்
தன் சுற்றத்துடன்
வானுலகில்தான் மகிழ்வு
அடைந்து புன்னகையை
இதழ்க்கடையில் விரிக்கிறது
எத்தனை செல்வங்கள்
உலகின் எந்த
மூலையில் சிதறிக்
கிடந்தாலும் மங்கை
என் மனஅமைதி
தலைவனின் மலரடியில்தான்
வசந்தா பாபாராஜ்
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments