தண்ணீர் .....தண்ணீர்.....!
நம்முடைய உடல் அமைப்புகளின் இயக்கம் சீராக இருப்பதற்கு தண்ணீர் மிக அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம். அதாவது குறைந்தபட்சம் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் வரை குடிக்க வேண்டியது கட்டாயம்.
குடிநீரில் பல நன்மைகள் உள்ளன, அவற்றுள்:
1. நீரேற்றம்:
சரியான நீரேற்றத்தை பராமரிக்க தண்ணீர் அவசியம், இது ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானது.
2. உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல்.
வியர்வை மற்றும் சுவாசத்தின் மூலம் உடல் வெப்பநிலையை சீராக்க தண்ணீர் உதவுகிறது.
3. செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல்.
நீர் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உறிஞ்சுதலுக்கான ஊட்டச்சத்துக்களை கரைக்க உதவுகிறது.
4. மூட்டு லூப்ரிகேஷன் போதுமான நீரேற்றம் மூட்டுகளை உயவூட்டுகிறது மற்றும் மூட்டு வலியைத் தடுக்க உதவுகிறது.
5. அறிவாற்றல் செயல்பாடு நீரேற்றமாக இருப்பது அறிவாற்றல்
செயல்பாடு, செறிவு மற்றும் மனநிலையை மேம்படுத்தும்.
6. நச்சுக்களை வெளியேற்றுதல். சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியேற்ற நீர் உதவுகிறது.
7. தோல் ஆரோக்கியம். சரியான நீரேற்றம் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு பங்களிக்கிறது, ஈரப்பதத்துடன் மற்றும் வறட்சி மற்றும் சுருக்கங்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
8. எடை மேலாண்மை. உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது கலோரி அளவைக் குறைக்கவும், எடை மேலாண்மைக்கு உதவும்.
9. தலைவலியைத் தடுக்கும் நீரிழப்பு தலைவலிக்கு வழிவகுக்கும், எனவே நீரேற்றமாக இருப்பது அவற்றைத் தடுக்க உதவும்.
10. சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது.சிறுநீரகத்தின் சரியான செயல்பாட்டிற்கு தண்ணீர் இன்றியமையாதது மற்றும் சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது.
உடலில் நீர் மேலாண்மை.
அவற்றை எப்படி குடிக்கிறோம், குடிக்கும்போது செய்யும் தவறுகள் என்ன என்று விளங்கிக் கொண்டாலே அதன் பயன்களை முழுமையாகப் பெற முடியும்.
சிலர் நன்றாக தாகம் எடுக்கிற வரைக்கும் தண்ணீர் குடிக்க மாட்டார். நன்கு தாகம் இருக்கும் சமயத்தில் தண்ணீரை கடகடவென வேகமாகக் குடிப்பார்கள். சொல்லப்போனால் வாய் கூட முழுமையாக நனையாது. தண்ணீரை விழுங்குவார்கள்.
அப்படி தண்ணீரை வேகமாகக் குடிக்கும்போது சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் பகுதியில் உள்ள அழுக்குகள் வெளியேறாமல் அப்படியே கீழ்நோக்கிப் படிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகளை உருவாக்கி விடும்.
நின்று கொண்டு குடிப்பது :-
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள்.
உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?" என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4116.
தண்ணீரை நாம் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நின்று கொண்டு தான் குடிக்கிறோம். அது மிகவும் தவறு.எவ்வளவு அவசரமாக இருந்தாலும் உட்கார்ந்த நிலையில் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் குடிக்கும் போது வாயில் இருந்து குடல் வரைக்கும் உள்ள நரம்புகளில் அதிர்வுகள் ஏற்படும்.
தண்ணீரை நின்றுகொண்டு குடித்தால் ஹார்மோன் சமநிலை ஏற்பட்டு அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
அதேபோல் நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் நேரடியாக தண்ணீர் அடி வயிற்றுக்குக் கீழ் போய்விடும். அதனால் தண்ணீர் குடிப்பதன் பலன் உங்களுக்குக் கிடைக்காது. தாகம் மட்டுமே தீரும்.
நின்றுகொண்டு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் தீமைகள்
ஆர்த்ரிடிஸ்,இரைப்பை, குடல் பாதை பாதிப்பு,சிறுநீரக பாதிப்பு,அஜீரணம், நெஞ்செரிச்சல், எலும்பு சிதைவு,நரம்பு மண்டலம் பாதிப்பு, மேலும் தாகமும் தணிக்காது.
உட்கார்ந்து கொண்டு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்
தண்ணீரை நாம் உட்கார்ந்து குடித்தால் உடலில் உள்ள ஆசிடிட்டி அளவு நீர்த்து போகும் மற்றும் உடலுக்குள் சரியான கலவையில் நீரானது சென்று உடலை புத்துணர்ச்சியோடு வைக்கும் .
எனவே நாம் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான முறையை பின்பற்ற வேண்டும். "பிஸ்மில்லாஹ்" சொல்லி தண்ணீர் சுத்தமாக உள்ளதா என்று பார்த்து உட்கார்ந்து கொண்டு பாத்திரத்தின் வெளியில் மூன்று முறை மூச்சு விட்டு வலது கையை உபயோகப்படுத்தி தண்ணீரை உமிழ் நீருடன் கலந்து மெதுவாக அருந்த வேண்டும். அருந்திய பிறகு "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூற வேண்டும்.
அதிக தண்ணீர் குடிப்பது :-
தண்ணீர் குடி்பபது உடலுக்கு நல்லது தான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் ஆபத்து தான்.அதிகமாகத் தண்ணீர் குடித்தால் ஹைப்போ நெட்மீரியா என்னும் நோய் நிலைக்கு தள்ளிவிடும். கிட்டதட்ட இது ஒரு போதை நிலை போன்றது. தாகமே இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும்.
அரிதாக இருந்தாலும், நீர் நச்சுத்தன்மை ஆபத்தானது. குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கும்போது அல்லது சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. தசைப்பிடிப்பு, வலி, குமட்டல் மற்றும் தலைவலி ஆகியவை நீர் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவு சாப்பிடும் முன் :-
பொதுவாக சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதால் சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லது என்று சொல்வார்கள். அதிலும் சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உணவைக் குறைவாக எடுத்துக் கொள்வோம்.
இதனால் அதிக கலோரி உடலில் சேருவதைத் தவிர்க்கலாம் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையில் சாப்பிடும் முன்பு தணணீர் குடிக்கக்கூடாது என்று ஆயுர்வேதம் சொல்கிறது.
ஏனெனில் சாப்பிடும் முன் தண்ணீர் குடித்து வயிறை நிரப்பிக் கொண்டால் சாப்பிடும்போது உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் பெற முடியாமல் போகிறது.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி என்றும் நோயின்றி வாழ நலமுடன் வாழ,உங்களுடன்...
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments