ரூ.150 கோடி வருமானத்தை உதறிய பெண்... இன்று பல கோடி மதிப்பு சாம்ராஜ்யத்துக்கு அதிபதி... யார் இவர்?

ரூ.150 கோடி வருமானத்தை உதறிய பெண்... இன்று பல கோடி மதிப்பு சாம்ராஜ்யத்துக்கு அதிபதி... யார் இவர்?


ரூ.150 கோடி அளவுக்கு வருமானம் ஈட்ட வாய்ப்பிருந்திருந்தும் அதை புறந்தள்ளிவிட்டு, ரூ.8,308 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கியுள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கை கதை பற்றியே இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட சுனீரா மதானியும் அவரது சகோதரர் சல் ரஹமதுல்லாவும் சேர்ந்து 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரத்தில் Stax என்ற நிறுவனத்தை தொடங்கினர். இவர்களுடைய நிறுவனத்தின் பிசினஸ் மாடல் கொஞ்சம் வித்தியாசமானது.

அதாவது பெரும்பாலான ஆன்லைன் தளங்கள் சதவிகித அடிப்படையில் விற்பனை மாதிரிகளை கொண்டிருக்கும்போது, இவர்கள் மட்டும் மாதாந்திர சந்தா செலுத்தும் வகையில் அனைத்தையும் ஒரே பேமெண்டில் செலுத்தும் தளத்தை உருவாக்கியுள்ளார்கள். ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் நிதி தொடர்பான பட்டப்படிப்பை முடித்த கையோடு தனது கேரியரை தொடங்கினார் சுனீரா மதானி. முதலில் அட்லாண்டாவில் உள்ள பேமெண்ட் பிராசஸர் நிறுவனமான First Data-வில் பணியாற்றினார்.

இங்கு பணிபுரிந்த சமயத்தில் தான் சதவிகித அடிப்படையிலான பரிவர்த்தனையை நிறுத்துவதற்கு இவர் ஒரு யோசனையை பரிந்துரைத்தார். ஆனால் இவரது யோசனையை வங்கிகளும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் நிராகரித்ததோடு இவர் மேல் சந்தேகமும் கொண்டனர். ஆனால் இவர் தனது புதுமையான யோசனையை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார்.

சொந்தமாக தொழில் தொடங்கினால் தான் நம்முடைய யோசனையை நிறைவேற்ற முடியும் என முடிவு செய்த சுனீரா, தன்னுடைய பெற்றோர்களின் அறிவுரையின்பேரில் மாதாந்திரா சப்ஸ்கிரிப்ஷன் மாடல் அடிப்படையிலான புதிய தளம் ஒன்றை தொடங்கினார். சுனீராவின் சகோதரரும் இதற்கு உறுதுணையாக இருந்தார். தங்களுடைய தொழில் திட்டத்தை ஆர்லாண்டோ நகரத்தில் காட்சிப்படுத்தியபோது இவர்களால் 100 வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிந்தது.

இதற்கிடையில் இவர்களுடைய Stax நிறுவனத்தை வாங்க பலரும் போட்டி போட்டனர். ஒரு கட்டத்தில் ரூ.145 கோடிக்கு கூட இந்த நிறுவனத்தை வாங்க சிலர் தயாராக இருந்தனர். ஆனால் இவர்களுடைய உத்வேகமும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த உறுதுணையாக இருந்தன.

சுனீராவும், அவரது சகோதரரும் ஆரம்பத்தில் தங்கள் வேலையை ராஜினாமா செய்தபோது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தத்தளித்தனர். தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் 50,000 அமெரிக்க டாலரை கடனாக வாங்கியே புதிதாக தொடங்கப் போகும் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அன்று சாதாரணமாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்று 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பத்து வருடங்களுக்கு மேல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுனீரா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு CEOSchool என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் தொழில்முனைவோர்களை வளர்த்தெடுக்கும் பணிகளை செய்து வருகிறது. இதோடு பாட்காஸ்ட் சேனல் ஒன்றையும் சுனீரா நடத்தி வருகிறார். மிலா மற்றும் ஆனா என்ற இரண்டு அழகான மகள்களுக்கு தாயாக இருக்கும் சுனீரா தேர்ந்த புத்தக வாசிப்பாளரும் ஆவார்.

news18


 



Post a Comment

Previous Post Next Post