ஹிஸ்புல்லா அட்டாக்... இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு!

ஹிஸ்புல்லா அட்டாக்... இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு!


இஸ்ரேல் - ஹமாஸ் - ஹிஸ்புல்லா என நடந்துவந்த போர் தற்போது ஈரான் நாட்டுடனான போராக மாறியுள்ளது. இந்தப் போரில் எட்டு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானுடனான மோதல்: ஹமாஸ் படைக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவந்தது. இந்நிலையில், ஹிஸ்புல்லாவை டார்கெட் செய்த இஸ்ரேல், லெபனானில் இயங்கி வரும் அந்த அமைப்பினர் உபயோகித்துவந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் வெடிக்கவைத்து சைபர் தாக்குதல் நடத்தியது. மேலும், ஈரான் மீது வான் வழி தாக்குதல் நடத்தி, ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸரல்லா கொல்லப்பட்டார். நஸரல்லா கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என ஹிஸ்புல்லா அறிவித்தது.

இஸ்ரேல் மீது தாக்குதல்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் நேற்று (1ம் தேதி) துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களை இஸ்ரேல் காவல்துறை சுட்டுக்கொன்றது. இந்த நிகழ்வு நடந்து முடிந்த ஓரிரு நிமிடத்தில் இஸ்ரேல் வான் முழுவதும் ஈரானின் ஏவுகணை சூழ்ந்தன. சடசடவென 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்.

தரை வழி தாக்குதலில் இஸ்ரேல்: 

இதேசமயத்தில் வான்வழி தாக்குதல் மட்டுமின்றி இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் நுழைந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறிவைத்து, அதனை தகர்ப்பதற்காக லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்தது.

இஸ்ரேல் வீரர்கள் மரணம்: 

ஹிஸ்புல்லா அமைப்பு மீது தாக்குதல் நடத்த லெபனானின் தெற்கு பகுதிகள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களில் 8 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவமே அறிவித்துள்ளது. இந்த தரை வழி தாக்குதலில் இறந்த எட்டு வீரர்களில் ஒருவர் ராணுவ கேப்டனான எய்தன் இட்சாக் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் எட்டு பேர் உயிரிழந்திருப்பதும், அதனை இஸ்ரேல் அரசே அறிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அந்நாட்டுப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஈரானின் முயற்சியை முறியடிப்போம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post