Ticker

Ad Code



தரமான பொருள்கள் விநியோகத்துக்கு ஜப்பான் ஆதரவு


நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. 
 
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு என்பன இதற்கு ஆதரவளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
 
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வர்த்தகத்தில் நியாயபூர்வமிக்க தன்மையை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவதுடன், இதன் மூலம் நாட்டில் போட்டிமிக்க சந்தை உருவாக்கப்படுகின்றது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

tamilmirror

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments