256 கி.மீ. தூரம்... உலகின் மிக நீளமான நேரான நெடுஞ்சாலை இதுதான்! எங்கே உள்ளது தெரியுமா?

256 கி.மீ. தூரம்... உலகின் மிக நீளமான நேரான நெடுஞ்சாலை இதுதான்! எங்கே உள்ளது தெரியுமா?


சவுதி அரேபியாவில் ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி.மீ. தூரத்திற்கு ரப் அல்-காலி பாலைவனத்தின் வழியாக வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவை இணைக்கும் 146 கி.மீ. நீளமுள்ள ஐர் நெடுஞ்சாலை உலகின் மிகவும் நேரான சாலை என்று பெயர் பெற்றிருந்தது. இதை விஞ்சி உலகின் மிகவும் நீளமான நேரான நெடுஞ்சாலை என்ற பெயரை சவுதி அரேபியாவில் இருக்கும் 256 கி.மீ. நீள சாலை பெற்றுள்ளது.

முதலில் அரேபிய மன்னருக்காக தனிப்பட்ட முறையில் ஒரு சிறிய சாலை அமைக்கப்பட்ட நிலையில், பின்னர் பொதுமக்களின் பயணத்திற்காக, உலகின் மிகப்பெரிய மணல் பாலைவனத்தின் வழியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை இருப்பு வைத்திருக்கும் ஹராத் நகரில் இருந்து, ஐக்கிய அரபு நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ள அல் ஃபத்தா வரை இந்த நெடுஞ்சாலை நீண்டு கிடக்கிறது

256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நேரான நீண்ட சாலை என்ற பெயரை பெற்றிருப்பதோடு, ஓட்டுநர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பதாக, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

256 கி.மீ. தூரமுள்ள இந்த சாலையை வெறும் 2 மணி நேரத்தில் கடக்கலாம் என்றாலும், விபத்துகள் சாதாரணமானவை என்பதால் கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்களை தொடர்ந்து சவுதி அரேபியா அரசு வழங்கி வருகிறது.

news18



 



Post a Comment

Previous Post Next Post