மலேசியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு மரணம் பதிவாகிறது

மலேசியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு மரணம் பதிவாகிறது


மலேசியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு மரணம் பதிவாகி வருகிறது என்று மலேசியாவின் தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர்முஹம்மது உசிர் மஹிடின் கூறினார்.

2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்தம் 47,964 இறப்புகள் பதிவாகியுள்ளன.

2023ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 48,693 இறப்புகளுடன் ஒப்பிடும்போது இது 1.5 சதவீதம் குறைவு.

இதன் அடிப்படையில் சராசரியாக ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 22 இறப்புகள். நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 533 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆண்களின் இறப்பு எண்ணிக்கை 27,434 ஆகவும், பெண்கள் 20,530 பேர் இறந்துள்ளனர். 

அதே காலகட்டத்தில், சிலாங்கூர் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதாவது 7,730 இறப்புகள் (16.1 சதவீதம்).

புத்ராஜெயாவில் 68 இறப்புகளுடன் (0.1 சதவீதம்) மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post