தெலங்கானாவில் மாட்டிறைச்சி கடைகள் மீது பாஜகவினர் தாக்குதல் : மோதல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு !

தெலங்கானாவில் மாட்டிறைச்சி கடைகள் மீது பாஜகவினர் தாக்குதல் : மோதல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு !


பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ குண்டர்கள் பலர் பல்வேறு வன்முறை செயல்களிலும், கும்பல் தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதற்கு எதிராகப் புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்துத்துவ கும்பலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில், தெலங்கானாவில் மாட்டிறைச்சி கடைகள் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் மேடக் பகுதியில் உள்ள மாட்டிறைச்சி விற்பனை கடைகளை மூடவேண்டும் என பாஜக இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மாட்டிறைச்சி விற்பனை கடைகள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மேடக் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

kalaignarseithigal


 



Post a Comment

Previous Post Next Post