எலபடகம அல் அமீன் மத்திய மகா வித்யாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை!

எலபடகம அல் அமீன் மத்திய மகா வித்யாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை!


RinTv சர்வதேச ஊடகவலை அமைப்பின் ஸ்தாபகரும்.
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பிரதித் தலைவருமான Deshbandhu, Deshamani,Vishwa keerti,Lanka putra GGI Jabeen Mohamed அவர்களும். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் NP அப்துல் கலாம் அவர்களும். எலபடகம அல் அமீன் மத்திய மகா வித்யாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாக வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ அல் ஆலிம் ஹாபீஸ் அஹமத் நசீர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துரைத்தபோது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் 80 வருடங்களைக் கடந்த இந்தப் பாடசாலையில் கடந்த 30 ஆண்டுகளாக 25 ஆசிரியர்களுக்கு மேற்பட்டவர்கள் குறைபாடாகவே காணப்படுகின்றனர்

மாகாண கல்வி பணிப்பாளரால் பல தடவைகள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் குறித்த பாடசாலைக்கு பற்றாக்குறை நிலவி வந்த வண்ணமே தொடர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார்

மேலும் 17 வருடமாக 3 கணிதப் பாட ஆசிரியர்கள் மற்றும் கணினி பிரிவு மற்றும் ஆரம்பப் பிரிவு primary மூன்றிற்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவே இல்லை தொடர்ந்தும் கணித பாட ஆசிரியரின் வெற்றிடம் வெற்றிடமாகவே உள்ளது என்ற விடயத்தையும் விசேடமாக குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய சூழ்நிலையிலும்
ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தனவந்தர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் பிரத்தியேக ஆசிரியர்களை நியமித்து பாடசாலை மாணவ மாணவிகளின் கல்விக்காக பாரிய முயற்சியை செய்து வருகின்றனர்.

இவ்வாறு கடினமான பயணத்திலும் அந்தப் பாடசாலை மாணவ மாணவிகள் வரலாற்று மிக்க சாதனைகளை படைத்துள்ளனர் என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

கடந்த ஆண்டு GCE O/L சாதாரண பரிட்சையில் 87 % சித்தி பெற்றுள்ளதோடு இந்த வருடம் GCE A/L உயர்தர பரீட்சையிலும் வர்த்தகம் / கணக்கியல்/ கலை துறைகளில் வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என்ற விடயத்தையும் உணர்த்தி பாடசாலையின் தேவைகளையும் Deshbandhu, Deshamani,Vishwa keerti,Lanka putra GGI Jabeen Mohamed அவர்கள் ஆளுநர் மற்றும் கல்வி சார் அதிகாரிகளின் முன்னிலையில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 





 



Post a Comment

Previous Post Next Post