Ticker

6/recent/ticker-posts

Ad Code



கடுமையான வெப்பத்தால் மரணமடைந்தவர்களில் அதிகமானோருக்கு ஹஜ்ஜூக்கான விசா இல்லை


மெக்கா:
புனித பூமியில் கடும் வெப்பத்தால் உயிரிழந்த யாத்ரீகர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் மெக்காவிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களிடம் முறையான ஹஜ் விசா இல்லை.

துனிசியாவின் வெளியுறவு, புலம் பெயர்ந்தோர் அமைச்சு இதனை கூறியது.

கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட 550 யாத்ரீகர்கள் மரணமடைந்துள்ளதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

இதில் மரணமடைந்தவர்களில் அதிகமானோர் சுற்றுலா விசா, உம்ரா விசாவை பயன்படுத்தி புனித பூமியில் ஹஜ் காலம் தொடங்குவதற்கு முன்பிருந்தே அங்கு தங்கி இருந்துள்ளனர்.

ஹஜ் விசா இல்லாத யாத்ரீகர்கள் அரஃபா, மினாவில் இருக்கும் போது அவர்களுக்கு சிறப்பு தங்குமிட வசதிகள் இல்லாததாலும், நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியதாலும் கடுமையான வெப்பம், வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருந்துள்ளது.

இதன் அடிப்படையில் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவ்வமைச்சு கூறியது.

nambikkai


 



Post a Comment

0 Comments