புதுடில்லியில் தகிக்கும் வெப்பம் - "2 நாள்களில் 52 பேர் மரணம்"

புதுடில்லியில் தகிக்கும் வெப்பம் - "2 நாள்களில் 52 பேர் மரணம்"


புதுடில்லியில் கடும் வெப்பம் காரணமாகக் கடந்த 2 நாள்களில் குறைந்தது 52 பேர் மாண்டனர்.

அத்தகவலை Times of India செய்தி நிறுவனம் வெளியிட்டது.

நகரில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உச்சத்தை எட்டியது.

இந்தியாவின் இந்தக் கோடைகாலத் தகிக்கும் வெப்பத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் மாண்டனர்.

நாட்டின் வடபகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியது.

40,000 பேருக்கு வெப்பக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சூட்டால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை நாடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அத்தகையோருக்கு உடனடிச் சிகிச்சை வழங்குமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

விலங்குகளையும் அனல் விட்டுவைக்கவில்லை.
சூடுதாங்காமல் பறவைகள் சுருண்டு விழுந்து மடிகின்றன.

காற்றாடிகளையும் குளிரூட்டும் கருவிகளையும் பயன்படுத்தி மக்கள் சூட்டைத் தணிக்கப் போராடுகின்றனர்.

மின்சாரப் பயன்பாடு திடீரென கூடும்போது நீண்டநேரத்துக்குச் சேவைத்தடை ஏற்படக்கூடும் எனப் பொறியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நேற்று முன்தினம் டில்லி அனைத்துலக விமான நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மின்சாரம் தடைபட்டுப்போனது.

seithi


 



Post a Comment

Previous Post Next Post