அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 70 நாட்களுக்கு பிறகு ஜாமீன்... - விசாரணை நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 70 நாட்களுக்கு பிறகு ஜாமீன்... - விசாரணை நீதிமன்றம் அதிரடி உத்தரவு !


ஒன்றிய பாஜக அரசு தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து ஆளுங்கட்சியினரை மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்து தொல்லை கொடுத்து வந்தது.

சுமார் 50 நாட்களுக்கும் மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாமல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. அங்கே அவருக்கு சரியான மருத்துவ உதவி செய்யாமல், உணவு கொடுக்காமல் பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தது ஒன்றிய பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு கடந்த மே 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

அவ்வாறு ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 50 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு இந்தியா கூட்டணி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவால் பிரசாரம் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜூன் 1-ம் தேதியோடு அவரது ஜாமீன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திஹார் சிறைக்கு சென்றார்.

தொடர்ந்து அவரது உடல்நிலை காரணம் காட்டி மீண்டும் ஜாமீன் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கெஜ்ரிவால் நாளை திகார் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே வரும் கெஜ்ரிவாலுக்கு ஆரவார வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் ஏறத்தாழ சுமார் 70 நாட்களை சிறையில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kalaignarseithigal


 



Post a Comment

Previous Post Next Post