இங்கு கார்களுக்கு அனுமதியில்லை... அமெரிக்காவில் இப்படி ஒரு இடமா? - ஆச்சர்ய தகவல்!

இங்கு கார்களுக்கு அனுமதியில்லை... அமெரிக்காவில் இப்படி ஒரு இடமா? - ஆச்சர்ய தகவல்!


அமெரிக்காவில் மிக அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதியில் பல ஆண்டுகளாக கார் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..

கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் யுஎஸ்ஏ டுடே நாளிதழ், 10 சிறந்த கோடைகால பயண இடங்களை அறிவித்தது. அதில் முதலிடத்தில் இருப்பது மத்திய மேற்கு பகுதியில் இருக்கும் அழகான தீவுகளில் ஒண்றான மேக்கினாக் தீவுதான். மிச்சிகன் மாகாணத்தில் மேல் மற்றும் கீழ் தீபகற்பங்களுக்கு இடையே ஹூரான் ஏரியில் இந்த குட்டித் தீவு அமைந்துள்ளது.

இந்த தீவுக்கு செல்ல சிறிய விமானத்தில் பயணிக்கலாம். அல்லது மெக்கினாவ் நகரத்தில் இருந்து படகு மூலம் சென்று டவுன்டவுனில் இறங்கி, அங்கிருந்து நடந்து செல்லலாம். இல்லாவிட்டால் சைக்கிளை வாடகைக்கு எடுக்கலாம். அல்லது, குதிரை வண்டியில் பயணிக்கலாம்.

மேக்கினாக் தீவில் வெறும் 500 பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், இங்கு ஆண்டு முழுவதும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். இந்த தீவுகளில் இயக்கப்பட்ட வாகனங்களால் இங்குள்ள குதிரைகள் அச்சமடைந்ததால், கடந்த 1898ஆம் ஆண்டு முதல் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்த தீவு பகுதியைச் சுற்றிப் பார்க்க வெறும் குதிரை வண்டிகள்தான் இருக்கின்றன.

ஆனால், இங்கு தங்குவதற்கு அதிநவீன நட்சத்திர விடுதிகள் இருக்கின்றன. எனவே, கோடை காலம் முழுவதையும் கழிக்க, பல பணக்காரர்கள் இங்கு வந்துவிடுகிறார்கள். யார் வந்தாலும், கார் இயக்கக் கூடாது என்பதைப் போலவே, மாலை 6.30 மணி ஆகிவிட்டால், விருந்தினர்கள் கண்டிப்பாக கோட், டை, ஸ்லாக்ஸ், பேண்ட் போன்றவற்றை அணிய வேண்டும்.

பகல் நேரத்தில் சர்ரே மலைப்பகுதிக்குச் செல்லலாம். இங்கு கண்கவர் காட்சிகள் நிறைய பார்க்க முடியும். அத்துடன், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான குதிரை வண்டிகளும், சறுக்கு வண்டிகளும் இருக்கும் அருங்காட்சியகமும் உள்ளது. அதேபோல், நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இருக்கும் பட்டர்ஃபிளை கன்சர்வேட்டரியும் இருக்கிறது.

இங்கு ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, தீவுப்பகுதியின் கரையோரங்களை பார்த்து ரசிக்கலாம். அத்துடன் மேக்கினாக் ஐலேண்ட் ஸ்டேட் பார்க், காடுகள் மற்றும் தனித்துவமான சுண்ணாம்பு பாறையால் செதுக்கப்பட்ட வளைவு ஆகியவற்றை பார்ப்பது மிகவும் அற்புதமானது.

news18


 



Post a Comment

Previous Post Next Post