Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலிய அரசாங்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்


டெல் அவிவ்:இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் அரசாங்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பரித்திருக்கின்றனர்.

காஸா போர், பிணையாளிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது ஆகியவற்றை எதிர்த்து மக்கள் போராடினர்.

ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போரைத் நெத்தன்யாஹு கையாளும் விதத்தை எதிர்த்து ஒவ்வொரு வார இறுதியும் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் இதற்கு முன் கூடிவந்தனர்.

இம்முறை போராட்டக்காரர்கள் ஜெரூசலம் நகர் வரை சென்று இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கும் நெத்தன்யாஹுவின் இல்லத்திற்கும் வெளியே ஆர்ப்பரித்தனர்.

காவல்துறையுடன் மோதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல்கள் புதிதாக நடத்தப்பட வேண்டும் என்று கோரினர்.

போராட்டத்தில் 9 பேர் கைதுசெய்யப்பட்டதாக இஸ்ரேலியக் காவல்துறை தெரிவித்தது.

nambikkai


 



Post a Comment

0 Comments