
திருக்குறள் ஆய்வுக் கழகம் அன்வர் பாட்ஷா பொன் விழா முன்னிட்டு ஐம்பெரு விழா நிகழ்ச்சி வருகின்ற ஜூலை மாதம் 5 ஆம் நாள் நடத்துவது குறித்து கலந்தாய்வுக் கூட்டம், கோவை மாவட்டம் குனியமுத்தூர் இடையர்பாளையம் ஊர்ப்புற நூலக அரங்கில், 14-05-2026 வியாழக்கிழமை மாலை 4-00 மணிக்கு
இனிதே நடைபெற்றது.
தமிழ்ச்செம்மல், முனைவர் மு.க.அன்வர் பாட்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இறைவணக்கத்துடன்கூட்டம் தொடங்கியது. முன்னதாக மறைந்த தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களுக்கு இரங்கல் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலந்தாய்வுக் கூட்டத்தில் முனைவர் மு.க.அன்வர் பாட்சா, வாகை துரைசாமி, ர.சின்னச்சாமி, வே.பாண்டியராஜ், கா. பரமேஸ்வரி, நூலகர் சாவித்திரி உதவியாளர் இராதா,மற்றும் எம்.அல்ஷஃபான் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைவரையும் வரவேற்றுப் பேசியபின், முனைவர் மு.க. அன்வர் பாட்ஷா அவர்கள், திருக்குறள் ஆய்வுக்கழகத்தின் புதிதாகத் தேர்வு செய்யப்பெற்ற பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
நிறுவனர் மற்றும் தலைவர் குறள்யோகி தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்பர் பாட்சா அவர்கள் பொறுப்பேற்றார்.

துணைத் தலைவர்கள் : ச.பொன்னுசாமி அவர்கள் மற்றும் வே.பாண்டியராஜ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுச் செயலாளர் :
வாகை துரைசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
துணைச் செயலாளர்கள் : திருமதி பிரபா செந்தில், மற்றும் சா.குமாரசாமி அவர்கள் ஆகியோர் தேர்வு செய்யப் பெற்றனர்.
பொருளாளர் : ர.சின்னச்சாமி அவர்கள் பொறுப்பேற்றார்.
மகளிர் அணி
ஒருங்கிணைப்புச் செயல்பாட்டுக் குழுவினர் :
திருமதி கா. பரமேஸ்வரி, திருமதி க.விஜயலட்சுமி, திருமதி கிரேஸ் லாவண்யா,திருமதி,ந. பிரேமா, திருமதி
எம்.பரிதாபானு, திருமதி பானுமதி தட்டச்சர்,திருமதி முனைவர் பொன் கவுசல்யா,திருமதி முனைவர் ஷர்மிளா பானு, திருமதி தமிழ்நிலா வே.சண்முகதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றனர்.
புரவலர்கள் :
பேராசிரியர் முனைவர் இரா விஜயராகவன் அவர்கள், முனைவர் சுகுமார் அவர்கள்,(ரூபி பள்ளித்தாளாளர்)
திரு.பால தமிழ்ச்செல்வன் அவர்கள்,திரு.அரசு செந்தில்குமார் அவர்கள், திரு.நூர்முகமது அவர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றனர்.
மதிப்புறு ஆலோசகர்கள்
:
கவிஞர் மருதூர் கோட்டீஸ்வரன் அவர்கள்,திரு.சதாசிவம் அவர்கள் தேர்வு செய்யப்பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் :
திரு.சம்பத்குமார் அவர்கள்,திரு. ஷாஜகான் அவர்கள், திரு.தமிழ் மணிகண்டன் அவர்கள்,திரு எல்.லெனின் அவர்கள், திரு இரமேஷ்,செல்வி. வெ.கோவழகி,செல்வி கௌசல்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பெற்றனர்.
கலந்துரையாடலில் பொன்விழா நடத்துவது குறித்த ஆலோசனைகள் கருத்துக்கள் கலந்துரையாடப் பெற்றது.
ஐம்பெரும்விழா கோவை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி வளாக அரங்கத்தில் நடத்த ஒப்புதல் பெறலாம் என்றும்,
திருக்குறள் பேரணி,மகளிர் அரங்கம், கருத்தரங்கம்,நூல் வெளியீடு- விருது வழங்கல், பாராட்டரங்கம் நிறைவு என்ற அமைப்பு முறையில் விழா நடத்துவது என்றும்,தகுதி படைத்த அமைப்புகளுக்கும் சிறப்புச் செய்தல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பொன்விழா மலர்க்குழுவினர்களாக,திரு.வாகை துரைசாமி,முனைவர் மு.க.அன்வர் பாட்ஷா,திரு.பால தமிழ்ச்செல்வன்,திரு ர.சின்னசாமி, வே.பாண்டியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பெற்றனர்.
கலந்துரையாடலில் நிறைவாக செயலாளர் வாகை துரைசாமி அவர்கள் நன்றி கூறினார்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments