
கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் 'Fawning'என்ற ஒரு மனநிலை போக்கு உருவாகியுள்ளது.
Gen Z எனப்படும் இளம் தலைமுறையினரிடையே இது வேகமாக பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வார்த்தை உளவியலாளர் பீட் வாக்கர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
'Fawning' எனப்படுவது பயம் அல்லது மன உளைச்சல், சமாளிப்பு தன்மை, மற்றவர்களை திருப்திப்படுத்த முயற்சி செய்வத, மோதல்கள் வராமல் பார்த்து கொள்ளுதல், எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நடத்தைகளை குறிக்கிறது.
Fawning மனநிலை
'Fawning'மனநிலையில் இருப்பவர்களுக்கு தன்னுடைய தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால், அவர்களது சுயமரியாதை பாதிப்படும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது.
இந்த மனநிலையானது, ஒரு நபர் தொடர்ந்து மனரீதியான உறவு சிக்கல்களைச் சந்திக்கும் பொழுது தன்னை தற்காத்து கொள்வதற்காக இப்படி நடந்து கொள்வார்கள். மற்றவர்களின் கோபத்தையோ அல்லது வெறுப்பையோ தவிர்ப்பதற்காகவே இப்படி தேவைகளை அடக்கி வாழ்கிறார்கள்.
மற்றவர்களால் இவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைப் பருவத்தில் உணர்ச்சிபூர்வமாக நிலையற்ற சூழல்களில் வளர்ந்திருக்கலாம்.
அப்போது தான் இது போன்ற மனநிலை உருவாகிறது. இத்தகைய நபர்கள், மற்றவர்களின் மனநிலை, மற்றும் எதிர்வினைகளைக் கூர்ந்து கவனித்து அதன் பின்னர் தங்களுடைய நடத்தைகளை மாற்றிக் கொள்வார்கள்.
சண்டைகள் வருவது போன்று அவர்களுக்கு தெரிந்து விட்டால் அதனை புறக்கணித்து விட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விடுவார்கள். இந்த பிரச்சினை நீண்ட நாட்களுக்கு தொடரும் பொழுது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையே பாதிக்கப்படுகின்றது.
ஏன் வருகிறது?
சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ளவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வு திட்டங்கள் அதிகமாகி உள்ளது. அதேவேளை, சமூக வலைத்தளங்களில் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கும் மனநிலையும் அதிகரித்துவிட்டது.
இது போன்ற சில காரணங்களால் மற்றவர்களுக்கு இணங்கிச் சென்று வாழும் மக்களின் தொகை அதிகமாகியுள்ளது. தன்னுடைய சுய அடையாளத்தை மறந்து மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சி, சுய எல்லைகளை உருவாக்குதல், மற்றும் ஆரோக்கியமான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சினைகளிலிருந்து வெளிவர நினைப்பவர்கள் முதலில் மனநிலை எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு உளவியல் நிபுணரின் உதவியுடன் சுய ஒழுக்கப் பயிற்சிகள், மற்றும் தனிப்பட்ட எல்லைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
சுய அனுதாபத்தையும், சுய விழிப்புணர்வையும் வளர்த்து கொண்டு, தங்களின் ஆரோக்கியத்தில் கவனத்தை கொண்டு வர வேண்டும்.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments