Ticker

6/recent/ticker-posts

தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா அணி அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ


இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த கையோடு ஒருநாள் தொடரும் நடைபெற இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் கேப்டன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாததால் அவர்களுக்கு பதிலாக சில மாற்று வீரர்களும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒரு நாள் அணியின் கேப்டனாக அனுபவ வீரரான கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரிஷப் பண்ட் கடந்த 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேபோன்று திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களும் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவரை தவிர அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவர் இருக்கின்றனர். அதன்படி எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் முழு வீரர்களின் பட்டியல் இதோ :

1) விராட் கோலி, 2) ரோஹித் சர்மா, 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) கே.எல் ராகுல் (கேப்டன்), 5) ரிஷப் பண்ட், 6) திலக் வர்மா, 7) ருதுராஜ் கெய்க்வாட், 8) நிதீஷ் ரெட்டி, 9) ஹர்ஷித் ராணா, 10) வாஷிங்டன் சுந்தர், 11) குல்தீப் யாதவ், 12) ரவீந்திர ஜடேஜா, 13) அர்ஷ்தீப் சிங், 14) பிரசித் கிருஷ்ணா, 15) துருவ் ஜுரேல்.

crictamil

 


Post a Comment

0 Comments