முதல் அதிபர் விவாதத்தில் மோதிக்கொண்ட ஜோ பைடன், டோனல்ட் டிரம்ப்

முதல் அதிபர் விவாதத்தில் மோதிக்கொண்ட ஜோ பைடன், டோனல்ட் டிரம்ப்


அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் முதல் அதிபர் விவாதத்தில் மோதிக்கொண்டுள்ளனர்.

அங்கு நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் பதவியிலிருக்கும் அதிபர் ஒருவருக்கும் முன்னாள் அதிபர் ஒருவருக்கும் இடையே நிகழும் முதல் விவாதம் இது.

அமெரிக்காவின் CNN ஒளிவழி விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பியது.

தலைவர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை என்றாலும் விவாதம் சுமுகமாகத் தொடங்கியது.

ஆனால் அது விரைவில் தனிப்பட்ட தாக்குதலாக உருமாறியது.

திரு. பைடன் பேசுகையில் அவ்வப்போது தடுமாறினார்.

திரு. டிரம்ப்போ நன்கு தெரிந்த பொய்த்தகவல்களை மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

குடிபெயர்ந்தோர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டும் அவற்றில் ஒன்று.

பணவீக்கம், பொருளாதாரம், பாதுகாப்பு, அமெரிக்கர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் நிலவும் நெருக்கடி போன்ற பல உள்நாட்டுப் பிரச்சனைகள் குறித்து இருவரும் வாதிட்டனர்.

உக்ரேனியப் பூசல், காஸா போர், பருவநிலை நெருக்கடி போன்ற சவால்மிக்க வெளியுறவுக் கொள்கைகளும் விவாதிக்கப்பட்டன.

இருவரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் பற்றித் தங்களுக்கு நன்கு தெரியும் என்பதைப் பேச்சில் வெளிப்படுத்த முயன்றனர்.

விவாதத்தின்போது தடுமாறுவதைத் தவிர்ப்பதிலும் திரு. பைடனும் திரு. டிரம்ப்பும் கவனம் செலுத்தினர்.

seithi


 



Post a Comment

Previous Post Next Post