மழலைகளின் குறிப்பு

மழலைகளின் குறிப்பு


பீட்ரூட்  கிழங்கை நன்றாக 
தோல் நீக்கும் முன்பாகவே கழுவி எடுத்து பின்னர் தோல் நீக்கி விட்டு சிறு துண்டுகளாகப் போட்டு உப்பு மாத்திரம் போட்டு அவித்து எடுக்கவும் . பின்னர் சீரகம்,உப்பு,வெங்காயம், பூண்டு,இஞ்சி  இவைகளோடு  வெள்ளைச் சீனி ஒரு தேக்கரண்டி  சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸ்ல் அரைத்து எடுத்து நல்ல எண்ணெய்  விட்டு தாளித்து பீட்ரூட் கிழங்கைப் போட்டு கிழறவும்  நன்றாக பிரட்டு வரும் போது எடுத்து சும்மாவே சாப்பிடக் கொடுக்கவும்.

அடுத்து சர்க்கரை
வள்ளிக்கிழங்கு
(வற்றாலைக் கிழங்கு) 

அதன் இலைகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தண்டை நீக்கி இலை மாத்திரம் எடுக்கவும்  பூண்டும் உப்பும் தட்டிப் போட்டு ஓலிவ் எண்ணெயில் தாளித்து இலையைப் போட்டு கிளறியதும் உடனே இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும் இவை இரண்டையும் சோறு இல்லாமல் குழந்தைகளுக்கு கொடுத்தாலும்  நன்மைதான். 

ஆர்.எஸ்.கலா


 



1 Comments

  1. வணக்கம் வாசகளே மீண்டும் சமையல் வழியிலும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இவை அனைத்தும் செயலாக்கம் பெறுவது வேட்டை அண்ணாவின் கை கொடுப்பினால் மாத்திரமே வேட்டை ஆசிரியருக்கு அன்பின் நன்றிகள் 😊

    ReplyDelete
Previous Post Next Post