பெண் ஒருவரால் பேய் வீட்டில் பிசாசுகள் ஆட்டம்

பெண் ஒருவரால் பேய் வீட்டில் பிசாசுகள் ஆட்டம்


பொசன் போயா தினத்தன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் தானசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பேய் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே ​தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு, நவகமுவ பிரதேசத்தில் பேய் வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கு பெண்ணொருவர், மற்றுமொரு நபருடன் சென்றிருந்துள்ளார். எனினும், அங்கிருந்த சவப்பெட்டியில் படுத்திருந்தவர், தன்னுடைய கணவர் என்று அப்பெண்ணுக்கு தெரியாது.

எனினும், மற்றுமொரு நபருடன் வந்திருக்கும் பெண், தன்னுடைய மனைவி என்பதை அறிந்துகொண்ட சவப்பெட்டியில் படுத்திருந்த நபர், மனைவியுடன் வந்திருந்த நபரையும் அப்பெண்ணையும் (மனைவியையும்)  தாக்கியுள்ளார். எனினும், பேய்தான் நண்பனையும் அவரது காதலியையும் தாக்குவதாக ஊகித்த சக நண்பர்கள், அந்த பேயை அடித்துள்ளனர்.

இதனால், நவகமுவ பேய் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. அதன்பின்னர், மோதல்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.   கைது செய்யப்பட்ட 12 பேரை விடுதலை செய்யுமாறு கடுவலை நீதவான் சனிமா விஜயபண்டார, திங்கட்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்  

நவகமுவ ரணவல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 12 இளைஞர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பொசன் போயாவை முன்னிட்டு நவகமுவ ரணல பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று பேய் வீடு கட்டியதாகவும், 21 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனுடன் மேலும் சில இளைஞர்கள் குழுவொன்றுடன் வந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  

குழு பேய் வீட்டிற்குச் சென்று உள்ளே நுழைந்தபோது, ​​​​சவப்பெட்டியில் கிடந்த மனிதனை அவள் திருமணமான கணவன் என்று அடையாளம் கண்டாள். சடலமாக இருந்த நபரும் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டதாகவும், சடலமாக இருந்தவர் உடனடியாக எழுந்து பெண்ணின் தலையில் தாக்க முயற்சித்ததாகவும் பொலிஸார் நீதிமன்றில்  தெரிவித்தனர்.

குறித்த பெண்ணும், சடலமாக காட்சியளித்த நபரும் திருமண  செய்துள்ள நிலையில், சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சட்ட ரீதியாக பிரிந்து வாழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை தாக்க முற்பட்டதையடுத்து அவருடன் இருந்த மற்ற இளைஞர்களும் பேய் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதாகவும், பேய் வீட்டில் இருந்த இளைஞர்களும் தாக்கியதால் பெரும் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.  

அதன்படி, பேய் வீட்டை ஒழுங்குபடுத்தும் குழுவினர் முதலில் நவகமுவ பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மற்றைய குழுவினர் பின்னர் வந்துள்ளனர், சம்பவத்தை ஏற்படுத்திய யுவதியின் தந்தை உயர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதனால், தலையீடு செய்ததாக, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கமல் விஜேசிறி நீதிமன்றில் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறி இருப்பதும் தெரியவந்தது.

tamilmirror


 



Post a Comment

Previous Post Next Post