Ticker

6/recent/ticker-posts

கொத்து கொத்துக்காக சடலங்கள், எலும்புக்கூடுகள்.. குப்பை மேடாக மாறிய எவரெஸ்ட் சிகரம்!


உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்தவர்கள், சொந்த நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் புகழைப் பெற்ற காலம் இருந்தது. இந்த காரணத்திற்காக, பச்சேந்திரி பால், அவதார் சிங் சீமா, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டெங்ஜிங் நோர்கே போன்றவர்களின் பெயர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் இன்றும் எதிரொலிக்கின்றன.

ஆனால் தற்போது இந்த மலை சுற்றுலா தளமாக மாறியுள்ளது. மக்கள் தினமும் ஏறும் மலையாக இது மாறியுள்ளது. இதனால் எவரெஸ்ட் சிகரம் குப்பை மேடாக மாறிவருகிறது. சமீபத்தில் நேபாள ராணுவம் எவரெஸ்ட் சிகரம் மற்றும் இமயமலையின் மற்ற இரண்டு சிகரங்களை சுத்தம் செய்தபோது சுமார் 11 டன் குப்பைகளை அகற்றினார். மேலும், அவர் கண்டுபிடித்த பொருட்களைப் பார்த்து அதிர்ச்சியுமடைந்தனர்.

பிபிசி அறிக்கையின்படி, எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 டன் குப்பைகளையும் 4 சடலங்கள் மற்றும் 1 எலும்புக்கூடு, அகற்றப்பட்டதாக நேபால் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் மவுண்ட் எவரெஸ்ட், நுப்சே மற்றும் லோஹ்சே போன்ற சிகரங்களில் இருந்து குப்பைகளை அகற்ற ராணுவத்திற்கு 55 நாட்கள் ஆனது. மேலும் எவரெஸ்ட் சிகரத்தில் 50 டன் குப்பைகள் இருப்பதாகவும், 200க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக உயர்ந்த குப்பை கொட்டும் பகுதி

கடந்த 2019ஆம் ஆண்டில் இராணுவத்தினர் வருடாந்த துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது எவரெஸ்ட் மலையில் கூட்டம் அதிகரித்து வருவதால், உலகின் மிக உயரமான குப்பை கொட்டும் இடமாக அது கருதப்பட்டது. 5 துப்புரவுத் திட்டங்களுக்குப் பிறகு, 119 டன் குப்பைகள், 14 மனித சடலங்கள் மற்றும் சில எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக இராணுவம் கூறுகிறது. இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து குப்பையை குறைக்க நிர்வாகம் விரும்புவதால், மலை ஏற செல்பவர்கள் மலத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என விதியை விதித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஏறுபவர்கள் குறைவு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் வசந்த காலத்திம் மே மாதத்தில் முடிவடைகிறது. இந்த ஆண்டு 421 பேருக்கு மலை ஏற அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு 478 பேர் இந்த மலையில் ஏறியுள்ளனர். நேபாளி வழிகாட்டிகளின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. இவர்களின் புள்ளிவிவரங்களையும் சேர்த்தால், இந்த ஆண்டு சுமார் 600 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 8 பேர் இறந்துள்ளர் அல்லது காணாமல் போயுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 19 ஆக இருந்தது. அவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் தான் உள்ளது.

news18


 



Post a Comment

0 Comments