தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக இம்ரான்கான் கட்சிக்கு தடை! - பாகிஸ்தானில் பரபரப்பு!

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக இம்ரான்கான் கட்சிக்கு தடை! - பாகிஸ்தானில் பரபரப்பு!


பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 1996ம் ஆண்டு Pakistan Tehreek-e-Insaf (பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாஃப்) என்ற கட்சியை நிறுவினார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்ட அவர் 2018ம் ஆண்டு வெற்றி பெற்று 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் நாட்டு பிரதமராக பதவி வகித்தார். பின்னர், அந்நாட்டு ராணுவத்துறையுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டார். தேர்தலில் பின்னடைவுகள் இருந்தபோதிலும், PTI (Pakistan Tehreek-e-Insaf)க்கு விசுவாசமான வேட்பாளர்கள் மற்ற கட்சிகளை விட அதிக இடங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், PTI (Pakistan Tehreek-e-Insaf) கட்சி, தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் தகவல் தொடர்புதுறை அமைச்சர் அட்டாவுல்லா தரார், PTI (Pakistan Tehreek-e-Insaf) கட்சி மீது உரிய முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அவர் கூறினார்.

PTI (Pakistan Tehreek-e-Insaf) மீது கட்டுப்பாடுகளை விதிக்க தெளிவான ஆதாரங்கள் உள்ளதாகவும், மேலும் கட்சிக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் தரார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள PTI (Pakistan Tehreek-e-Insaf) கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவூப் ஹசன், ஆளும் அரசின் அராஜகத்தை பிடிஐ பொறுக்காது என்றும், அரசின் நடவடிக்கையை நாங்களும் முறைப்படி எதிர்கொள்வோம என்றார்.

asianetnews



 



Post a Comment

Previous Post Next Post