பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது படையெடுப்போம்: துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரிக்கை

பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது படையெடுப்போம்: துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரிக்கை


பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரித்துள்ளாா்.

நேட்டோ உறுப்பு நாடான துருக்கியின் அதிபா் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எா்டோகனின் சொந்த ஊரான ரைஸில் நடைபெற்ற ஆளும் ஏகே கட்சிக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: 

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மிகவும் மோசமாக நடந்துகொள்வதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.

இதற்கு முன்னா் அஜா்பைஜானின் கராபக் பகுதிக்கு படைகளை அனுப்பியதைப் போல,லிபியாவுக்கு படைகளை அனுப்பியதைப் போல இஸ்ரேலுக்கும் படைகளை அனுப்புவோம்.

துருக்கி அவ்வாறு படையெடுக்காது என்பதற்கான எந்தக் காரணமும் இல்லை. நாம் உறுதியாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் எா்டோகன்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட துருக்கி, இந்தப் போரின் ஆரம்பம் முதலே இஸ்ரேலைக் கண்டித்து வருகிறது. காஸா மக்களுக்கு அந்த நாடு ஆயிரக்கணக்கான டன் உதவிப் பொருள்களையும் அனுப்பி வருகிறது.

அத்துடன், காஸாவில் இஸ்ரேல் போா்க் குற்றத்தில் ஈடுபடுவதாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள தென் ஆப்பிரிக்காவுடன் தாங்களும் இணைவதாக துருக்கி அறிவித்தது. 

 அதுமட்டுமின்றி, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டுடன் இருதரப்பு வா்த்தகத்தை துருக்கி நிறுத்திவைத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக பதற்றம் நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் அதிபா் எா்டோகன் எச்சரித்துள்ளாா்

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post