பாபக்கர் பள்ளிவாசல் பிரச்சினை பள்ளிவாசலை விற்க முற்படுவோருக்கு பொதுமக்கள் நையப்புடைப்பு

பாபக்கர் பள்ளிவாசல் பிரச்சினை பள்ளிவாசலை விற்க முற்படுவோருக்கு பொதுமக்கள் நையப்புடைப்பு


தெஹிவளை கல்விகார வீதியில் சுமார் 80 பேச்சஸ் பரப்பு  கொண்ட காணி ஒன்றை சவ்தி அரேபியாவை சேர்ந்த சகோதரர் ஒருவர் பள்ளிவாசலுக்காக வாங்கி அன்பளிப்பு செய்ததும்,  அதை சில உலமாக்கள் தொடர்மாடி வீடு ஒன்றைக் கட்ட விற்பனை செய்ய முயற்சி செய்வதும் இந்நாட்டு முஸ்லிம்கள் அறிந்த விடயமே.

பொதுமக்கள் எடுத்த முயற்சியின் பயனாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இதை வக்பு  சொத்தாக பதிவு செய்யும்படி இட்ட கட்டளைக்கு அமைவாக இது ஒரு பள்ளிவாசலாக வக்பு சொத்தாக வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டது.

இப்பதிவிலும் திருட்டுத் தனம் செய்த உலமாக்கள்,இது பள்ளிவாசல் அல்ல தமது சொத்து என வாதாடிக்கொண்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் கட்டளையை அடுத்து இது பள்ளிவாசலாக பதிவு செய்யப்பட்டது.

மேலும் இதன் நம்பிக்கை பொறுப்பாளர்களாக இந்த அபகரிப்பாளர்கள் தம்மை பதிவு செய்து கொண்டதோடு, நீதிமன்றத்திற்கே விளையாட்டு காட்டும் வகையில், எரியும் வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம் என்ற வசனத்திற்கு ஒப்ப,இப்பள்ளிவாசலின் ஒரு பகுதியை வக்புசபை அனுமதியுடன், அடகு வைக்க, அல்லது விற்பனை செய்ய, அல்லது கை மாற்றம் செய்ய, அல்லது பரிசாக கொடுக்க முடியும் என்பதையும், பின் கதவு வழியாக ஏதும் பிடுங்கிச் செல்ல இவ்வாறு பதிவு செய்து கொண்டனர். இதற்கு சில அதிகாரிகள் விலை போனதாகவும்  தகவல்.

எனவே இச்சொத்தானது 100% பள்ளிவாசல் சொத்தாக பதிவு செய்யப்படும் வரையில் இதை விட்டுக் கொடுக்கப் போவதில்லை  என பொதுமக்கள் வழக்கை தொடர்கின்றனர். உலமாக்களிடமிருந்து இப்பள்ளி வாசலை பாதுகாப்பதற்காக மூன்று வழக்குகள் தொடர்கின்றது.

இவ்அபகரிப்பு விடயத்தில் ஜமியத்துல் உலமாவின் செயலாளர் ஒருவரும் உள்ளபடியால், இதை பொதுமக்கள் ஜமீயதுல் உலமாவில் முறையிட்டனர்.

இவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜமீயத்துல் உலமா, பொது மக்களிடம் கடிதம் கேட்டு, கடிதம் கைய கையளிக்கப்பட்டும்
சுமார் ஒரு வருடம் நெருங்கியும் இவருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 03. 08. 2024 அன்று ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, இப்ப பள்ளிவாசலை விற்க முயற்சிக்கும் குழுவின் சட்டத்தரணி,  புதிதாக சேவைக்குச் சேர்ந்த மௌலவி ஒருவரின் கையில் ஒரு அறிவித்தலை கொடுத்து வாசிக்க செய்தார். விடயத்தை அறியாத மெளலவியும் இதை வாசித்தார்.

" ஜமாத்தார்களே இப்பள்ளிவாசலின் வழக்குகள் அத்தனையிலும் நாமே வெற்றி பெற்றிருக்கின்றோம். நாமே இதற்கு நம்பிக்கை பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றோம். எனவே இதற்கு எதிராக சிலர் தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு எந்த உதவியும் ஒத்தாசைகளையும், பொருளாதார வசதிகளையும் பொதுமக்கள் செய்ய வேண்டாம்" என அறிவிப்புச் செய்தார்.

இதைத் தொடர்ந்து சபையில் இருந்த ஜமாத்தார்கள்,  எந்த வழக்கில் வெற்றி பெற்றீர்கள்? யாரிடம் பணம் பெறப்பட்டது ?  என்ற விபரத்தினை தரும்படி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு விடயங்களுக்காக குறிப்பிட்ட ஒரு சிலரிடமே உதவிகள் பெறப்படுவதே தவிர யாரிடமும் பணம் வசூலிக்கப்படுவதிலை.

இதனைத் தொடர்ந்து பள்ளிவாசலை விற்பனை செய்ய முயற்சிக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி எழுந்து பொதுமக்களை தாக்க முயன்றார். இதனைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் பேர் வரை தொழுகைக்காக வந்திருந்த நிலையில் ஆயிரம் பேரினரும் பொறியில் சட்டத்தரணி சிக்கிக் கொண்டார். பொதுச் சொத்தை சூறையாடும் இவர்களுக்கு பாடம் கற்பிக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து நின்ற அனைத்து பொதுமக்களும் சேர்ந்து சட்த்தரணியை நையப் புடைத்து வழி அனுப்பி வைத்தனர்.

இது பற்றி தெஹிவளை போலீசாரிடம் வினவியபோது, பாபக்கர் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அசம்பாவிதம் நடைபெற்றதற்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

பள்ளிவாசல் சொத்துக்களையும், பொதுச் சொத்துக்களையும் ஏப்பம் விடத் துடிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக அமையட்டும்.

வேட்டை நிருபர் 



 



Post a Comment

Previous Post Next Post