ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது.


தெஹ்ரானில் திரு ஹனியே தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தின் வெளியே சுமார் 7 கிலோகிராம் எடையுடைய ஒரு எறிகணை வீசப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

ஈரானின் அதிபர் மசூத் பெசேஷ்கியான் (Massoud Pezeshkian) பதவியேற்பு விழாவில் பங்கேற்க திரு ஹனியே தெஹ்ரானுக்கு சென்றிருந்தார்.

இஸ்ரேல் வகுத்த திட்டம் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஹனியேவின் மரணம் பற்றி இஸ்ரேல் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அவர் மரணமடைந்த பின்னர், ஈரானிய ராணுவ அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும், சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் New York Times அறிவித்துள்ளது.

ஈரானிய உளவுத்துறை ஹனியேவின் மரணம் குறித்து தற்போது விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

அவர் தங்கியிருந்த வீட்டின் பாதுகாவலர்கள் விசாரிக்கப்படுகின்றனர், மேலும் அவர்களின் கைத்தொலைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஈரானிய அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன.




 



Post a Comment

Previous Post Next Post