உலகின் மிகப்பெரிய கடனாளி நாடு எது? - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய கடனாளி நாடு எது? - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா, கடனாளி நாடுகள் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது.

உலகின் பல நாடுகள் கடன் வாங்கித் தான் தங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன. ஆனால், உலகின் மிகப்பெரிய கடனாளி நாடு எது தெரியுமா? அண்மையில் World of Statistics என்ற அமைப்பு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய கடனாளி நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டின் கடன் 33,229 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சீனா தான். இந்த நாடு 2023 இல் 14,692 பில்லியன் டாலர் கடனைக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடான ஜப்பான் 3வது பெரிய கடன்கார நாடாக இருக்கிறது.

ஜப்பானின் கடன் 10,797 பில்லியன் டாலர்கள். அதேபோல், பிரிட்டன் 3,469 பில்லியன் டாலர் கடனுடன் இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. உலகின் கடனாளி நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 3,354 பில்லியன் டாலர் கடன் உள்ளது. இத்தாலி நாட்டின் கடன் 3,141 பில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில், பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் அண்மை காலமாக கடும் போட்டியை கொடுத்து வரும் இந்தியாவின் கடன் அளவு 3,057 பில்லியன் டாலராக இருப்பதோடு, கடனாளி நாடுகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

உலகில் அதிக கடனைக் கொண்ட 15 நாடுகள் விவரம் பின்வருமாறு:-

1. அமெரிக்கா: 33,229 பில்லியன் டாலர்கள்
2. சீனா: $14,692 பில்லியன்
3. ஜப்பான்: $10,797 பில்லியன்
4. பிரிட்டன்: $3,469 பில்லியன்
5. பிரான்ஸ்: $3,354 பில்லியன்
6. இத்தாலி : $3,141 பில்லியன்
7. இந்தியா: $3,057 பில்லியன்
8. ஜெர்மனி: $2,919 பில்லியன்
9. கனடா: $2,253 பில்லியன்
10. பிரேசில்: $1,873 பில்லியன்
11. ஸ்பெயின்: $1,697 பில்லியன்
12. மெக்சிகோ: $955 பில்லியன்
13. தென்கொரியா: $928 பில்லியன்
14. ஆஸ்திரேலியா: : $876 பில்லியன்
15. சிங்கப்பூர்: $835 பில்லியன்

news18



 





Post a Comment

Previous Post Next Post