Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஹிஸ்புல்லாவின் பதிலடியால் திணறிய இஸ்ரேல்! 48 மணிநேர நாடு தழுவிய அவசர நிலை


இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய பாரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து, 48 மணிநேர நாடு தழுவிய அவசர நிலையை இஸ்ரேல் பிரகடனப்படுத்தியுள்ளது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும், இஸ்ரேலில் உள்ள 11 இராணுவ தளங்கள் மற்றும் 11 படைமுகாம்கள் மீது 320க்கும் மேற்பட்ட வான்வெளி மற்றும்ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் இஸ்ரேலால் தனது தலைமை இராணுவத் தளபதி ஃபுவாட் ஷுகுரைக் கொன்றதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் ஹிஸ்புல்லா கூறுகிறது.

எவ்வாறாயினும், அந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேலிய தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவை இலக்காகக் கொண்டமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த குழு தயாராகி வருவதாகத் தெரியவந்ததை அடுத்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாக வும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேலுக்கு எதிராக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது.

எனினும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக மதிப்பிடப்பட்ட பின்னர், முன்கூட்டிய தாக்குதல்களால் மிகப் பெரிய பாதிப்பை முறியடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் வெடித்ததற்கு இணையாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தாக்குதல் தொடங்கியதில் இருந்து நேற்று அது பாரிய ரீதியில் மாற்றம்பெற்றுள்ளது.

100 இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தெற்கு லெபனானில் உள்ள 40 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா ஏவுதளங்களை தாக்கியதுடன், ஆயிரக்கணக்கான லாஞ்சர் பீப்பாய்களை அழித்ததாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.

320க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்

அவை முக்கியமாக வடக்கு இஸ்ரேலை இலக்காகக் கொண்டமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இஸ்ரேலை நோக்கி ட்ரோன்கள் மற்றும் 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியதுடன் 11 இராணுவ இலக்குகளை தாக்கியதாக ஹிஸ்புல்லா வெளிப்படுத்தியுள்ளது.

முன்கூட்டிய தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் அறிந்ததாக கூறும் கருத்தை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது.

கடந்த மாதம் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் ஏவுகணைத் தாக்குதலில் லெபனானின் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் ஷுக்ரை படுகொலை செய்ததில் இருந்து இரு தரப்புக்கும் இடையே விரிவடையும் தாக்குதல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் "எங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கும், வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கும், ஒரு நகர்வை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் யார் நம்மைத் துன்புறுத்தினாலும் - நாங்கள் அவருக்கு தீங்கு விளைவிப்போம்" என்று நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ''இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களுக்கே பதிலளித்து வருகிறது ஆனால் முழு தாக்குதல் நகர்வை நாங்கள் மேற்கொள்ளவில்லை" என்றார்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் பெரும்பாலானவை தெற்கு லெபனானில் உள்ள இலக்குகளை கொண்டமைந்துள்ளன. ஆனால் அச்சுறுத்தல் உள்ள எந்த இடத்திலும் தாக்குதல் நடத்த இராணுவம் தயாராக உள்ளது என்று இஸ்ரேலிய இராணுவ செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கா - ஈரான் 

இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் புகை மற்றும் தீயுடன் இருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இதற்கமைய இஸ்ரேல்- ஹிஸ்புல்லா தாக்குதலானது , அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த பிராந்திய மோதலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அவரது வழிகாட்டுதலின்படி, மூத்த அமெரிக்க அதிகாரிகள் தங்கள் இஸ்ரேலிய சகாக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

tamilwin


 Ai SONGS

 



Post a Comment

0 Comments