Ticker

6/recent/ticker-posts

Ad Code



7th பாஸ்.. SSLC ஃபெய்ல்.. இரண்டில் எது பெஸ்ட்? AI சொன்ன விசித்திர பதில் என்ன தெரியமா?


ஏ.ஐ தொழில்நுட்பாம் வந்த பிறகு, பலரும் அந்த தொழில்நுட்பத்திடம் பல கேள்விகளை கேட்டு, அது சரியாக பதில் சொல்கிறதா என்பதை பார்க்கிறோம். சிலர் தங்களின் வேலையை செய்வதற்கும், இன்னும் சிலர் தங்களின் வாழ்க்கைக்கான ஆலோசனைகளையும் ஏ.ஐ.தொழில்நுட்பத்திடம் கேட்டு வருகின்றனர்.

ஆனால் மெட்டா ஏ.ஐ-யிடம், ஒரு பயனாளி, கவுன்டமணி - செந்தில் நகைச்சுவையில் வருவதைப்போல 7ஆம் வகுப்பு பாஸ் பெரியதா அல்லது SSLC ஃபெயில் பெரியதா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நகைச்சுவையில் செந்தில் பதிலளிப்பதைப்போல தான் கிட்டத்தட்ட ஏ.ஐ-யும் பதிலளித்துள்ளது.

SSLC ஃபெயில் பெரியதா? அல்லது 7ஆவது பாஸ் பெரியதா என்ற கேள்விக்கு, “இரண்டு படிப்பும் முடிவுபெறாமலோ அல்லது பாதியில் தடைபட்டோ தான் உள்ளது. ஆனால் 7ஆவது பாஸ் தான் பெரியது. ஏனென்றால், SSLC ஃபெயில் என்றால் 10ஆம் வகுப்பு முடிக்காமல் இருப்பது. 7ஆவது பாஸ் என்பதை விடவும், 10ஆம் வகுப்பு ஃபெயில் என்பது குறைவான தகுதி தான். எனவே 7ஆவது பாஸ் என்பது தான் பெரிய தகுதி என பதிலளித்துள்ளது.

இந்த பதிலை கேட்டு, கவுன்டமணியை போல தான் தவித்திருப்பார் அவர். இந்த ஏ.ஐ-யின் பதிலை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏ.ஐ.தொழில்நுட்பம் மனிதர்களுக்கு இணையான வேலைகளை நொடிப்பொழுதிகளில் செய்து முடித்தாலும், இது போன்ற ஒரு எளிய மற்றும் குழப்பமான கேள்விகளுக்கு ஏ.ஐ.தொழில்நுட்பமே தடுமாறுகிறது என பலரும் சமூகவலைதளங்களில் கிண்டலடிடுத்து வருகிறார்கள்.

news18


 Ai SONGS

 



Post a Comment

0 Comments