இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டாம்.. ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. எவை தெரியுமா?

இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டாம்.. ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. எவை தெரியுமா?


விசா இல்லாமல் கூட வெளிநாட்டுக்கு சென்று வர முடியும். ஆனால் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லவே முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியர்கள் இரண்டு நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல முடியும். ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து இந்த இரண்ட நாடுகளுக்கு செல்லலாம். இது குறித்த விரிவான தகவலை பார்க்கலாம்.

பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? என்று கேட்டால் பெரும்பாலானோர் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் விசா இல்லாமல் கூட சில நாடுகளுக்கு செல்ல முடியும். ஆனால், பாஸ்போர்ட் இல்லையென்றால் வெளிநாட்டுக்கு பயணமா? என பலர் யோசிப்பார்கள்.

பாஸ்போர்ட் இல்லாமல்

பாஸ்போர்ட் இல்லாமலே இந்தியர்கள் இரண்டு வெளிநாடுகளுக்கு சென்று வர முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. எப்படி என நீங்கள் யோசிப்பது தெரிகிறது. ஆனாலும் அதுதான் உண்மை. இந்தியாவுக்கு அருகிலேயே உள்ள நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு தான் பாஸ்போர்ட் இல்லாமலே சென்றுவர முடியும். பாஸ்போர்ட் இல்லையென்றால் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் செல்லலாமா என்ற கேள்வியும் எழும். இது பற்றி இங்கே பார்ப்போம்.

நேபாளம்

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம்.இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைப் பிரதேசங்களை கொண்ட நேபாளம், இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளது. இந்தியா - நேபாளம் நாடுகள் 1,751 கிலோ மீட்டர் தூர எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுடன் பெரும்பாலன பகுதிகளை பகிர்ந்து கொள்கிறது.

பேருந்து சேவை

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு ரயில் சேவையும் உள்ளது. பழமையான கோயில்கள், உயரமான மலைச்சிகரங்களை கொண்ட நாடாக நேபாளம் உள்ளது. நேபாள நாட்டிற்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் எதுவும் தேவையில்லை. இந்திய அரசு கொடுத்த எதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் போதும். அதாவது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அரசின் அடையாள ஆவண சான்று இருந்தாலே போதும்.

டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு பேருந்து சேவையும் உள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள பசுபதிநாத் கோயில், பொக்காராவில் உள்ள ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் , லும்பினியில் புத்தரின் பிறந்த இடம் என இங்கு சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் பல இடங்கள் உள்ளன.

பூடான்

இந்தியா- சீனாவுக்கு இடையே பூடான் அமைந்துள்ளது. இந்தியாவுடன் 699 கிலோ மீட்டர் நீளத்தை பூடான் பகிர்ந்து கொள்கிறது. சிக்கிம், அருணாசலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுடன் பூடான் தனது எல்லையை கொண்டுள்ளது. உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக பூடானும் உள்ளது. இங்குள்ள கலாச்சாரம், பூகோள ரீதியிலான அமைப்பு ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக அமைந்துள்ளது.

பூடானுக்கு செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. இந்திய அரசு வழங்கிய அடையாள ஆவண சான்றான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காட்டி செல்ல முடியும். ஆனாலும் பூடான் நாட்டில் நீண்ட நாட்கள் தங்க திட்டமிட்டால் பூடான் அதிகாரிகளிடம் இதற்கான அனுமதியை பெற வேண்டும். பூடான் எல்லையிலேயே இதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

news18


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post