பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலை கோரிபோராட்டம்

பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலை கோரிபோராட்டம்


பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலை கோரி மாணவர் அமைப்புகள் நடத்திய வன்முறை போராட்டத்தில் 52 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் மாணவர்கள், ஆளுங்கட்சியினர், மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த சூழ்நிலையில், நீதியை கோரியும், பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலை வலியுறுத்தியும், தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையும், பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலை கோரி அரசை எதிர்த்து போராடும் குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

வன்முறையின் அதிகரிப்பை கண்டு தலைநகர் டாக்காவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறும் முன்னாள் ராணுவ அதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள், மற்றும் பாடகர்கள் உட்பட பலர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




 



Post a Comment

Previous Post Next Post