Ticker

6/recent/ticker-posts

Ad Code



பிரான்ஸில் பதிவான வெடிப்பு சம்பவம்: சிசிரிவியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி


பிரான்ஸில் (France) யூத சபை ஒன்றுக்கு வெளியே நடந்த தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவமானது, மான்ட்பெலியரின் அருகே உள்ள கடலோரப் பகுதியான லா கிராண்டே மொட்டில் உள்ள பெத் யாகோவ் சபைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த பாதுகாப்பு கமராவில் சந்தேகநபர் ஒருவர் பலஸ்தீன கொடியொன்றை வைத்திருப்பது பதிவாகியுள்ளது.

இதன் படி, இந்த வெடிப்பு சம்பவமானது, பயங்கரவாத தாக்குதல் என்பது விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் பிரான்ஸில் யூதர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குப் பின்னால் பாரிய நோக்கம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, சம்பவத்தின் பின்னணியில் அந்நாட்டில் யூத மக்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ibctamil



Ai SONGS

 



Post a Comment

0 Comments