சஜித் அணியின் புதிய பிளவுகள் பற்றிய தகவல்கள் வெளியாகின்றன.

சஜித் அணியின் புதிய பிளவுகள் பற்றிய தகவல்கள் வெளியாகின்றன.


அடுத்த 08 ஆம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு பற்றிய உடன்படிக்கையை கைச்சாத்திட சஜித் பிரேமதாசவை உள்ளிட்ட குழுவினர் தயாராகி திட்டங்களை வகுத்துக்கொண்டிருப்பதோடு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுக்கும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பிளவுகள் தீவிரமடைந்து வருவதாக பதிவாகின்றது.

அந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள ரஞ்சித் மத்துமபண்டாரவிற்குப் பதிலாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரதியீடு செய்யப்பட்டு முன்னேறி வருவதாக நேற்று (03) இரவாகும்போது செய்திகள் கிடைத்தன. அதற்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ள கலாநிதி ஹர்ஷ த சில்வாவிற்குப் பதிலாக கலாநிதி நாலக்க கொடஹேவா ஏற்கெனவே சஜித் பிரேமதாச முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளையில் கபீர் ஹஷீம் , எரான் விக்கிரமரத்ன, எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை விஞ்சியதாக புதிதாக சேர்ந்த சரித்த ஹேரத், டலஸ் அழகப்பெரும போன்றவர்கள் சஜித் பிரேமதாசவின் முன்னிலையில் தமக்கான இடங்களை உறுதிசெய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தலதா அத்துகோரள போன்ற பெருந்தொகையானோர் இன்றளவில் மௌனமாக இருத்தல் பற்றியும் அரசியல் களத்தில் அதிக கவனஞ் செலுத்தப்படுகின்றது.

lankatruth



 



Post a Comment

Previous Post Next Post