ஏலம் முதல் சம்பளம் வரை! 2025 - 2027 ஆம் ஆண்டிற்கான IPL விதிகள் என்ன?

ஏலம் முதல் சம்பளம் வரை! 2025 - 2027 ஆம் ஆண்டிற்கான IPL விதிகள் என்ன?

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் தலா ₹7.5 லட்சம் போட்டி ஊதியமாக வழங்க உள்ளதாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா எனப்படும் 18ஆவது ஐபிஎல் போட்டிகள் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் மாதத்தின் கடைசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, வரும் 2025 - 2027 ஐபிஎல் சீசனுக்கான விதிகள் முடிவெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.7.5 லட்சம், போட்டி ஊதியமாக வழங்க உள்ளதாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும், அது தக்கவைப்பு முறை அல்லது ஆர்.டி.எம் என எந்த முறை என்பதை அந்த நிர்வாகங்களே முடிவெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படித் தக்கவைக்கும்போது, சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அதிகபட்சமாக 5 பேரையும், அன்கேப்டு (Uncapped) வீரர்கள் 2 பேரையும் தக்கவைத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக ₹120 கோடி மட்டுமே வீரர்களை வாங்க செலவிடவும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாடு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அப்படிப் பதிவு செய்த பிறகு ஏலம் எடுக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வெளியேறினால், அவர் 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டது.

இந்த விதிகளில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும் வகையில் ஒன்று அமைந்துள்ளது. ஒரு இந்திய வீரர், தொடர்ந்து 5 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தால், அவர் Uncapped வீரராகவே கருதப்படுவார். இந்த விதியின் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் இந்த சீசனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதி பிரத்யேகமாக தோனிக்காகக் கொண்டுவரப்பட்டது என தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

இதுதவிர, மிகவும் விவாதப் பொருளான இம்பாக்ட் பிளேயர் விதி, 2027ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post