அரசின் அதிரடி மாற்றங்கள்- 2

அரசின் அதிரடி மாற்றங்கள்- 2



இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்:

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக களனிப் பல்கலைக்கழகத்தின் நாடகம், சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறை சார்ந்த கலாநிதி உதித கயாஷான் குணசேகர நியமிக்கப்பட்டார்.

கொழும்பில் இரண்டு வீதிகள்:

கொழும்பில் இரண்டு முக்கிய வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள சர் பரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை திறக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த உத்தரவின்படி, இன்று முதல் இரண்டு சாலைகளும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பம்

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், புதிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

பாடசாலை  நிகழ்வுகளுக்கு அரசியல்வாதி வருகை நிறுத்தம்:

பாடசாலை  நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை நிறுத்துமாறு புதிய பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நழுவவிட முடியாத  சந்தர்ப்பம் கிட்டியுள்ளது:

சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க  எம்மால் முடியாமல் உள்ளது.

இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத  சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து  பல்வகைத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்.



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post