
நம் நாட்டில் உழைக்கும் மக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவது மிகவும் கடினம். காரணம் அந்த அளவுக்குச் யாருக்கும் சம்பளம் கிடைப்பது இல்லை. பன்னாட்டு நிறுவனங்களில் பெரிய பதவியில் இருப்பவர்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் குறைந்த சம்பளம் மட்டுமே. ஆனால் ஒரு வேலை செய்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரராகலாம். இந்த வேலையை செய்பவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
சம்பளம் அதிகம் என்பதால் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்த வேலையில் சேருபவர்கள் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். அதுவும் யாருடைய உத்தரவையும் பின்பற்ற வேண்டாம். இந்த வேலையை செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பாதிக்கலாம்.
ஒரு கலங்கரை விளக்கத்தில் லைட் கீப்பர் வேலைக்குத்தான் இவ்வளவு சம்பளம் தருகிறார்கள். ஆனால் இந்த வேலையைச் செய்பவர்கள் எப்போதும் தனியாக இருக்க வேண்டும். இது எகிப்தின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் உள்ள ஒரு கலங்கரை விளக்கத்தில் தான் இந்த வேலை உள்ளது. இது ஃபரோஸ் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் முதல் கலங்கரை விளக்கம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்த லைட்ஹவுசில் கீப்பராக இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும், ஏன் இவ்வளவு அதிகச் சம்பளம் கொடுக்கப்படுகிறது, என்று பார்ப்போம். ஒரு கலங்கரை விளக்கத்தை பராமரிப்பவர் செய்யவேண்டிய ஒரே வேலை, விளக்கு நன்றாக எரிவதை உறுதி செய்வதுதான். பகல், இரவு என்று பாராமல் லைட் ஹவுஸில் விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்வதுதான் அவருடைய ஒரே வேலை. எஞ்சிய நேரம் தூங்குவது, சாப்பிடுவது அல்லது கடலின் அழகைப் பார்த்து ரசிப்பது என்று நேரத்தைக் கழிக்கலாம். இப்பணிக்காக ஆண்டுக்கு ரூ.30 கோடி வழங்கப்படும். இருப்பினும், பலர் இந்த வேலையைச் செய்ய விரும்பவில்லை.
இந்த வேலை உலகின் கடினமான வேலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் கலங்கரை விளக்கக் காவலர் எப்போதும் தனியாக இருக்க வேண்டும். கடலின் நடுவில் பேச யாரும் இருக்க மாட்டார்கள். ஃபரோஸ் கலங்கரை விளக்கம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கட்டுமானத்திற்கு மரம், கற்கள் மற்றும் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன. சில நேரங்களில் கடலில் புயல்கள் மிகவும் வலுவாக இருக்கும். அப்போது கலங்கரை விளக்கம் முழுவதும் தண்ணீரில் மூழ்கலாம். அப்போது லைட் ஹவுஸ் கீப்பரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். இதனால்தான் தன்னந்தனியாக அங்கு வேலை செய்ய யாரும் முன்வரவில்லை.

முற்காலத்தில் இரவில் வெளிச்சம் இல்லாததால் கப்பல்கள் பாறைகளை கவனிக்காமல் அவற்றின் மீது மோதிவிடும். இதனால் பல கப்பல்கள் கடலில் மூழ்கியிருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்தான் கலங்கரை விளக்கங்கள் தோன்றின. கலங்கரை விளக்கங்கள் தண்ணீரில் உள்ள பெரிய பாறைகள், ஆழமற்ற பகுதிகளைப் பார்த்து அதற்கு ஏற்ப கப்பலை பாதுகாப்பாக இயக்க உதவுகின்றன. இதனால்தான் லைட்ஹவுஸ்களில் விளக்கு நீண்ட தூரம் பார்க்க ஒளியை அளிக்கும் வகையில் பிரகாசமாக உள்ளது. கப்பல்கள் ஆபத்துகளைத் தவிர்க்கவும் வழிகாட்டவும் இந்த விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்ட இந்தக் காலத்திலும் கலங்கரை விளக்கங்கள் இன்னும் உள்ளன. ஜிபிஎஸ் சிக்னல் தொலைந்தால் வழிகாட்டுதற்கு கலங்கரை விளக்குகளே உள்ளன.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments