
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம். இவர் ஒரு பாம்பு பிடி வீரர். இவரது மகன் சிவ ராஜூவுக்கும் பாம்பு பிடிக்க கற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிவ ராஜூ 5 அடி நீளமுள்ள பாம்பின் தலையை தன் வாயில் வைத்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் பாம்பை வாயில் வைத்து கடித்து கொண்டே ஸ்டைலாக தலைமுடியை வாரி போஸ் கொடுத்துள்ளார்.
அப்போது வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் போது பாம்பு கடித்ததை உணராத இவர், விஷம் தலைக்கேற சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ரீல்ஸ் முகத்தால் பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
webdunia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments