602 ரன்ஸ்.. யார் சாமி இவரு.. வினோத் காம்ப்ளி, ஜெய்ஸ்வாலை முந்திய மெண்டிஸ்.. ப்ராட்மேனுக்கு நிகராக 3 சாதனை

602 ரன்ஸ்.. யார் சாமி இவரு.. வினோத் காம்ப்ளி, ஜெய்ஸ்வாலை முந்திய மெண்டிஸ்.. ப்ராட்மேனுக்கு நிகராக 3 சாதனை


நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி செப்டம்பர் 26ஆம் தேதி கால்லே நகரில் துவங்கியது. 

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா ஒரு ரன்னில் அவுட்டானாலும் மற்றொரு துவக்க வீரர் கருணரத்னே 46 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் தினேஷ் சண்டிமல் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இலங்கை 602: 

அதில் சண்டிமல் சதமடித்து 116 ரன்கள் மேத்தியூஸ் 88 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் டீ சில்வா தம்முடைய பங்கிற்கு 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கமிண்டு மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் சுமாராக பந்து வீசிய நியூசிலாந்து பவுலர்களை பந்தாடினார்கள். நேரம் செல்ல செல்ல போதும் என்று சொல்லும் அளவுக்கு பந்தாடிய அந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்தது. 

அதில் குசால் மெண்டிஸ் 106* ரன்களும் அபாரமாக விளையாடிய கமிண்டு மெண்டிஸ் 182* ரன்களும் அடித்தனர். அதனால் இலங்கை 602-5 ரன்கள் குவித்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 500 ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இலங்கை சாதனை படைத்தது.

கமிண்டு மெண்டிஸ் சாதனை: 

இதற்கு முன் கடந்த 2005 நேப்பியர் டெஸ்ட் போட்டியில் இலங்கை 498 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அதை விட இலங்கை வீரர் கமிண்டு மெண்டிஸ் அறிமுகமானதிலிருந்து இதுவரை தன்னுடைய முதல் 13 இன்னிங்ஸில் 1004 ரன்கள் குவித்துள்ளார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 13 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த ஆசிய வீரர் என்ற இந்தியாவின் வினோத் காம்ப்ளி சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன் வினோத் காம்ப்ளி தனது முதல் 13 இன்னிங்ஸில் 965 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் குறைந்த போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த ஆசிய வீரர் என்ற இந்தியாவின் ஜெய்ஸ்வால் சாதனையையும் கமிண்டு மெண்டிஸ் உடைத்துள்ளார். இதற்கு முன் ஜெயஸ்வால் 9 போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த நிலையில் மெண்டிஸ் 8 போட்டிகளிலேயே 1000 ரன்கள் கடந்துள்ளார்.

இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் டான் ப்ராட்மேன் சாதனையும் அவர் (இருவரும் தலா 13 இன்னிங்ஸ்) சமன் செய்துள்ளார். தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 2வது நாள் முடிவில் 22-2 எனத் தடுமாறி வருகிறது. டாம் லாதம் 2, டேவோன் கான்வே 9 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் கேன் வில்லியம்சன் 6* அஜாஸ் பட்டேல் 0* ரன்களுடன் உள்ளனர்.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post