Ticker

6/recent/ticker-posts

“மனித நேயத்தை புல்டோசரின் கீழ் நசுக்கிய பாஜக” - உச்சநீதிமன்றத்தின் கருத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி!


பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மையின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. அந்த வகையில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகவும், கடத்தியதாகவும், வைத்திருந்ததாகவும் கூறி இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர் பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள். மேலும் உத்தர பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கலாச்சாரம் பரவி வருகிறது.

அதாவது ஒருவர் குற்றம்சாட்டப்பட்டாலே அவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் உத்தர பிரதேசத்தில் தொடங்கிய இந்த நிகழ்வு அடுத்தடுத்து என பாஜக ஆளும் ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவ தொடங்கியுள்ளது. அண்மையில் கூட சிறுவர்களுக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக வாடகை வீட்டில் குடியிருந்த இஸ்லாமிய சிறுவனின் வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.

இந்த நிகழ்வால் வீட்டின் உரிமையாளர் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்தது. இந்த சூழலில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்தது

அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உருவாக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

நீதிமன்றத்தின் கண்டங்களுக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் கருது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனித நேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கிய பாஜக-வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளதாகவும், இந்த மிக முக்கியமான பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாஜக அரசுகளின் இந்த ஜனநாயக விரோதப் போக்கில் இருந்து குடிமக்களை நீதிமன்றம் பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தால் நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அண்மைக்காலமாக நாட்டில் தொடங்கியுள்ள புல்டோசர் கலாச்சாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தலையீடு வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் மீது புல்டோசர் ஓட்டுவது நீதியல்ல என்றும், உடனடி நீதி போன்ற கோட்பாடுகள் ஒரு நாகரிக மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை, அரசியலமைப்பின் அடிப்படை ஆத்மாவுக்கு முற்றிலும் எதிரானவை என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments