சாத்தான்குளம் சம்பவத்தை நினைவூட்டும் சம்பவம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
திருட்டு சம்பவம் ஒன்றில் விசாரிக்க பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதான தீப்ராஜ் மற்றும் அவரது பாட்டியை கட்னி காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு போலீசாரால் அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் என முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் விமர்சித்துள்ள நிலையில், அனைவரும் சுவாசிக்கும் காற்றையே தலித்துகளும் சுவாசிப்பதாகவும், இதனை ஏற்க முடியாது எனவும் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
This is unacceptable. Humans have to be treated like humans. Every Dalit has the same red blood in their body, they breath the same air and live in the same world. #everylifematters https://t.co/RVqb70gN55
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024
சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி சந்தோஷ் டெஹாரியா தலைமையில் விசாரணை நடைபெறுவதாக கத்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. சிமாலா பிரசாத், அந்த வீடியோவில் இருக்கும் மூதாட்டி மற்றும் சிறுவன் மீதும் காத்னி காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments