தலைப்பு இனவாதம்?
1.இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதத்துக்கு அரசு அனுசரணை ஒத்துழைப்பு வழங்கக் கூடாது.
2.இனவாதம் மதவாதம் பேசும் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
3.ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
4.இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் சிறுபான்மைக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
தலைப்பு! வடக்கு / கிழக்கு
5.இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதாக இருந்தால் அந்தப் பிரதேச மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
6.யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட் டோர் விடயத்தில் நீதி செலுத்துவதற்காக ஜனாதிபதி ஆணை குழு உருவாக்கப்பட வேண்டும்.
7.யுத்தத்தால் கொல்லப்பட்டோர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கான நஷ்ட ஈடு அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு அரச தொழில் வழங்கும் முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
8.வடக்கிலும், கிழக்கிலும் உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விகிதாசார் அடிப்படையில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
9.கிழக்கில் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகம் சார்ந்த நிபந்தனைகள்!
10.முஸ்லிம் கலாச்சார அமைச்சுக்காக கட்டப்பட்ட கட்டடத் தொகுதி முஸ்லிம் கலாச்சார மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்காக ஒதுக்க வேண்டும்.
11.மூடப்பட்ட கோயில் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் பள்ளிவாசல்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும்.
12.பதியப் படாத வணக்க ஸ்தலங்கள் பள்ளிவாசல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.
13.மதரசாக்களை அரச கல்வித்திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
14.அரபு மற்றும் ஏனைய மொழிகளில் ஆன இஸ்லாமிய மார்க்க புத்தகங்கள் கலாச்சார புத்தகங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப் படமுன் அவற்றை மறுபரிசீலனை செய்ய ஒரு sensor board உருவாக்கப்பட வேண்டும்.
15.முஸ்லீம் பெண்களுக்கான ஆடை கலாச்சாரம் அரச தொழில் துறைகளிள் குறிப்பாக போலீஸ் மற்றும் தாதிமார் ஆடை விவகாரத்தில் இந்தோனேசியா,மலேசியா நாடுகளில் அணிவது போன்ற ஆடை கலாச்சாரத்தை உருவாக்கி முஸ்லிம் பெண்களுக்கும் அவ்வாறான தொழில் துறைகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
16.பாடசாலை மாணவர்கள் மத அடையாளங்களுடன் பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி வழங்குவதாக இருந்தால் முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்களுக்கு தாடியுடன் கல்வி கற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
17.அனைத்து மதரசா பாடசாலைகளிலும் ஒரே விதமான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
கோரிக்கை!
1.ஆசிரியர்களின் கோரிக்கை அடிப்படையில்சம்பளம் முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும்.
2. முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை உட்பட அனைத்து குறைபாடுகளும் தீர்க்கப்பட வேண்டும்.
3.தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் போது எமது கட்சியின் சிபாரிசை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
4.ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அதற்கான தீர்வை எடுத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
5.வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் தொடர்பான குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கும் வேட்பாளர்களிடம் சமூகம் சார்பாக முன்வைக்கும் நிபந்தனைகளும்
கோரிக்கைகளும் ,இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருடன்நாடளாவிய ரீதியில் இணைந்து செயல்பட நாம் உறுதி மொழி அளிக்க வேண்டும்
Deshbandhu Deshamani
Vishwa keerti Lanka putra
GGl Jabeen Mohamed
RinTv founder and director
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
1 Comments
Thanks 👍
ReplyDelete