Ticker

6/recent/ticker-posts

இந்த நாட்டை விட்டு வெளியேறுவோருக்கு டிக்கெட்டுடன் உதவி தொகை வழங்கும் அரசு… எங்கு தெரியுமா?


ஐரோப்பிய கண்டத்தில் அங்கம் வகிக்கும் இந்த நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு டிக்கெட்டுடன், உதவித் தொகையையும் அந்நாட்டு அரசு வழங்கவுள்ளது.

பலரும் அறிந்த ஸ்வீடன் நாட்டில்தான் இந்த சம்பவம் நடந்து வருகிறது. அந்நாட்டின் குடியுரிமை அமைச்சர் மரியா மல்மார் ஸ்டெங்கார்ட் இந்த திட்டத்திற்கான மசோதாவை கொண்டு வந்துள்ளார்.

இதன்படி, வெளிநாட்டில் பிறந்த எந்த ஸ்வீடன் குடிமகனும் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறாரோ அவர் அதை தானாக முன்வந்து செய்யலாம். இதற்காக அவர்கள் பணம் பெறுவார்கள். அதுமட்டுமின்றி, வெளிநாட்டிற்கு செல்வதற்கான கட்டணமும் அரசால் வழங்கப்படும். அதாவது, வெளிநாடுகளில் பிறந்து ஸ்வீடனில் குடியேறியுள்ளவர்களுக்கு தான் இத்தகைய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்நாட்டின் பூர்வீக குடிமக்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோர் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பினால் அவர்களுக்கு 10 ஆயிரம் ஸ்வீடிஷ்  அதாவது இந்திய மதிப்பில் ரூ. 80 ஆயிரம் வழங்கப்படும். இதே திட்டத்தில் சிறுவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அத்துடன் அவர்கள் வெளிநாடு செல்வதற்கான டிக்கெட் கட்டணத்தையும் அரசே செலுத்தும்.  உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் ஸ்வீடனில் வந்து குடியேறுகிறார்கள். 20 ஆண்டுகளில் இந்த நாட்டின் மக்கள் தொகை இரட்டிப்பாகியதற்கு இதுவே காரணம்.

ஸ்வீடனின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று நம்பப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, 2015ல் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

கடந்த ஆண்டு ஸ்வீடனை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அங்கு வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் இது முதல்முறையாக நடந்தது.

news18


 



Post a Comment

0 Comments