Ticker

6/recent/ticker-posts

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!


பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

கொல்கத்தா, ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று மம்தா அறிவித்தார்.

மரண தண்டனை 

அதன்படி, பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணை கொல்வது அல்லது கோமா நிலைக்கு தள்ளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை. பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை.

ஒருமுறை பாலியல் வழக்கில் சிக்கும் நபர் மீண்டும் அதே மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை. இந்த மசோதா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது. இதற்கு ஆளுநர் ஆனந்த் போஸ் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சட்டமாக்கப்படும். மேலும், ‛அபராஜிதா டாஸ்க் போர்ஸ்’ என்ற பெயரில் போலீசில் புதிய பிரிவு உருவாக்கப்படும்.

இந்த பிரிவு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை பெற்று கொடுப்பதற்கான பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

ibctamilnadu


 Ai SONGS

 



Post a Comment

0 Comments