
இந்த உலத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அழிந்து கொண்டு செல்கின்றது. இன்னும் பெருகிவருகின்ற இஸ்லாமியர்கள் பார்வைக்கு வெறும் கணக்கெடுப்பில் அவர்கள் அதிகரிக்கின்றார்களே அன்றி அறிவில் அவர்கள் முன்னேற்றம் காணவில்லை.
அதனால் அவர்கள் வெள்ளத்தில் அடிபட்டுச்செல்லும் குப்பை, கூழங்களுக்கும் பெருமதியற்ற, வெகு சீக்கிரத்தில் அழிந்துவிடும் கடல் நுரைக்கும் அவர்கள் ஒப்பாகிக்கொண்டிருக்கிறார்கள்.
முறையான அறிவு அவர்களுக்கு புகட்டப்படாத காரணத்தினால் அவர்களில் அனேகர் தஜ்ஜாலின் கொடிய சோதனையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். முன்னோர்களை அவமானப்படுத்திக் கொண்டு, அவர்களை இழிவாகப் பேசிக்கொண்டு தம்மாலும் குர்ஆன் ஹதீதை சுயமாக விளங்க முடியும் என்று சொல்கின்றார்களே!
எல்லாமே அழிந்துகொண்டுபோகும் இத்தருணத்தில் அல்லாஹ்வும் அவனது ரஸூலும் விரும்புகின்ற கல்வி மட்டும் மங்கவில்லை, மடியவில்லை, அது இப்பொழுதுதான் புனிதம் பெருகின்றது என்ற கருத்தை சரி காணலாமா?
"கல்வி அகற்றப்படும். அதுவரை மறுமை நிகழாது". (புகாரி: 7063)
அறிஞர்களெல்லாம் மறைந்து விடுவார்கள். எதற்கும் உபயோகமற்ற முட்டாள்கள் எஞ்சியிருப்பர். அவர்கள் தொலிக் கோதுமையின் அல்லது ஈத்தம் பழத்தின் தொலியைப்போன்றிருப்பர். (புகாரி 6434)
அதாவது நெல்லை மூடியிருக்கும் உமி போன்றவர்கள்தான் எஞ்சியிருப்பர் என்று உலக அழிவின்போது காணப்படும் கல்வி நிலவரம் பற்றி பெருமானார் முஸ்தஃபா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
whatsapp
0 Comments