
பிரான்ஸைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை 23 வயது ஓவன் L (Owen L) கொடூரமாகக் கொலை செய்ததாக The Sun நாளேடு தெரிவித்தது.
Fortnite எனும் காணொளி விளையாட்டில் ஓவன் தோற்றதால் அவர் சிறுமியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு வன்முறையில் ஈடுபடும் தன்மை உள்ளதாகவும் இதற்குமுன் குற்றங்களைப் புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காணொளி விளையாட்டுகளுக்கு ஓவன் அடிமை.
இம்மாதம் 7ஆம் தேதியன்று விளையாட்டில் தோற்ற அவர் தம்மை அமைதிப்படுத்த மக்களை மிரட்டித் திருட முயன்றார்.
அப்போது 11 வயது லூயிஸ் லசாலை (Louise Lassalle) அவர் சந்தித்தார்.
எதையோ தொலைத்ததுபோல நாடகமிட்டு அவர் சிறுமியைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை மிரட்டி உடைமைகளைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி மிரட்டினார்.
சிறுமி அலற ஆரம்பித்ததும் கத்தியால் சரமாரியாகக்
குத்த ஆரம்பித்தார்.
சிறுமியின் உடல் இம்மாதம் 10ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆடவர் சிறுமியைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments